தொடர்கள்
விகடகவியார்
பயப்படுகிறாரா ஸ்டாலின்

2025903164520720.jpg

விஜய் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறை அஞ்சுகிறதா திமுக -தமிழக வெற்றி கழகம் இடையே மறைமுக உறவு உள்ளதா என்பதை அரசு விளக்க வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி இருக்கிறார். சம்பவம் நடந்த இடத்துக்கு சென்ற முதலமைச்சரிடம் அன்றே நிருபர்கள் விஜய் கைது செய்யப்படுவாரா என்று கேட்டபோது விசாரணை ஆணையம் என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டும் அதன் பிறகு தான் நடவடிக்கை என்று சொன்னார். விஜய் கைது செய்யப்பட வேண்டும் என்று முதலமைசர்க்கு முதலில் அழுத்தம் வந்தது. விஜய் கைது மூலம் தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனை தவிர இது விஜய்க்கு அனுதாபமாக திரும்பி விடுமோ என்று யோசித்து தான் விஜய் கைதை தவிர்க்கிறார் முதல்வர்.

விசாரணை கைது முடிவைப் பொறுத்து விஜய் கைது என்றால் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை எனில் புஸ்ஸி ஆனந்த் மீது எந்த அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறீர்கள் என்று திருமாவளவன் கேட்கிறார். ஒரு கைது செய்வதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்றால் அதை எதிர்த்து சமாளிக்க வேண்டியது தான் அரசின் கடமை. அதை விட்டு முதல்வரின் இந்த மழுப்பலான பதில் விமர்சனத்துக்கு உள்ளாகும் என்பது தான் உண்மை.

2025903164545103.jpeg

பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் போராட்டம் செய்த போது முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று சவால் விட்டார். அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா உடனே டாக்டர் ராமதாசை கைது செய்து சிறையில் அடைத்தார். ராமதாசை எதற்கு கைது செய்தீர்கள் என்று கேட்டபோது அவர்தான் என்னை கைது செய்யுங்கள் என்று கேட்டார் அவரது கோரிக்கையை நிறைவேற்றினேன் என்று பதில் சொன்னார் ஜெயலலிதா. எதிர்க்கட்சி தலைவராக இருந்த கருணாநிதியும் என்னை கைது செய்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று சொன்னார் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் கருணாநிதியை கைது செய்தார்.

2025903164603485.jpeg

சட்டம் ஒழுங்கு பிரச்சனை எல்லாம் வரவில்லை. அதற்கு பதில் சிறையில் இருந்த கருணாநிதி சிறையில் பூத்த சின்ன மலர்கள் என்று புத்தகம் தான் எழுதினார். விசாரணை ஆணைய உத்தரவுக்கு பிறகு கைது என்று சொல்லும் தமிழக அரசு தற்சமயம் பி எச் தினேஷ் என்பவர் குற்றப்பத்திரிக்கையில் விஜய் பெயரை சேர்க்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். உயர்நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கையில் விஜய் பெயரை சேர்க்கச் சொல்லி உத்தரவிட்டால் விசாரணை ஆணையம் சொல்லட்டும் என்று சொல்வார்களா என்பதுதான் இப்போதைக்கு பில்லியன் டாலர் கேள்வி.