தொடர்கள்
தமிழ்
அமிழ்தமிழ்து தமிழமிழ்து 13 : “ஹெல்த் டிப்ஸ் ” – மோகன் ஜி

20260213134951566.jpg

நோய்நொடி இல்லாத வாழ்க்கைக்கு நிறைய டிப்ஸ் கொடுத்திருக்காருங்க தேரையர் சித்தர் அதுல கொஞ்சம் இன்றைக்கு பார்த்திடுவோம்:

உண்பது இருபொழுது ஒழிய மூன்று பொழுதுண்ணோம்.

உறங்குவது இரா ஒழியப் பகல் உறக்கம் செய்யோம்.

பெண் கடமைத் திங்களுக்கோர் காலன்றி மருவோம்.

பெரும்தாகமெடுத்திடினும் பெயர்த்து நீர் அருந்தோம்.

மண் பரவு கிழங்குகளிற் கருணையன்றிப் புசியோம்.

வாழையிளம் பிஞ்சு ஒழியக் கனியருந்தல் செய்யோம்.

நண்புபெற உண்ட பின்பு குறுநடையும் கொள்வோம்.

நமனார்க்கு இங்கு ஏது கவை நாம் இருக்கும் இடத்தே.

சின்னதா அர்த்தத்தையும் பார்க்கலாம்:

இரண்டு வேளை மட்டுமே உண்போம். மூன்று முறை அல்ல;

பகலில் உறங்க மாட்டோம். இரவு மட்டுமே தூக்கம்;

மாதமொருமுறை தான் மனைவியுடன் கூடுவதும்;

மிக அதிகமாக தாகம் எடுப்பினும் உணவின் இடையில் நீர் பருக மாட்டோம்;

மண்ணுள் விளையும் கிழங்குகளில் கருணைக்கிழங்கு தவிர வேறெதையும் சேர்க்க மாட்டோம்;

வாழையில் பிஞ்சு தவிர முற்றிய காயை சமைக்க மாட்டோம்;

உணவு உண்டபின் கொஞ்ச நேரம் நடப்போம்;

அப்படியெல்லாம் நாங்கள் இருக்கும்போது யமனுக்கு இங்கென்ன வேலை?

கொஞ்ச காலம் தேரையர் பேச்சுப்படி நடந்து, உடம்பு தேறுதான்னு பார்த்திடுவோமே!