தொடர்கள்
பேசிக்கறாங்க
சச்சின் கேட்டிருக்க வேண்டிய கேள்வி ! why not ? Ball பாய்

20260213180309972.jpg

சமீபத்தில் ஒரு செய்தி.

சச்சின் டெண்டூல்கரின் ரிடைர்மென்ட் எப்படி என்பது குறித்து அப்போதைய செலக்ஷன் கமிட்டீ சேர்மன் சந்தீப் பாட்டீல்

20260213180445723.jpg

சொல்ல, வந்தது.

மேட்டர் இதுதாங்க.

வயசோ 39.

கடைசி ஒரு வருஷ டெஸ்ட் மேட்சுகளில் 18.6 ஆவரேஜ் ரன்கள்.

செலக்ஷன் கமிட்டீ சேர்மன் சந்தீப் பாட்டீல் சச்சினைக் கேட்கிறார். கமிட்டீ உங்களுக்கு மாற்று பேட்ஸ்மேனைப் போடலாமென இருக்கிறோம் என்றதற்கு ஷாக் ஆயிட்டு, “ நிசமாத்தான் சொல்றீங்களா? என்றாராம் பதிலுக்கு.

இது எப்பிடி இருக்கு?

அன்றைய நிலை இதுதான்.

2012. சச்சின் டெண்டுல்கர் தனது சிறந்த வீரர்களில் ஒருவராகவே இருந்தார். ஒரு வருடம் முன்பு, 2011 உலகக் கோப்பையை வெல்லும் தனது கனவை அவர் நனவாக்கினார், ஆனால் அதன் பிறகு எல்லாம் தலைகீழாக மாறியது போல் தோன்றியது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா முழுவதும் எட்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து நான்கு அரைசதங்களுடன் 560 ரன்கள் எடுத்தார், அந்த இரண்டு தொடர்களிலும் இந்தியா 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது, மேலும் தனது 100வது சர்வதேச சதத்தை அடிக்க வேண்டும் என்ற அழுத்தம் அவரது கழுத்தில் மூச்சடைத்தது. பின்னர், இங்கிலாந்து இந்தியாவை சொந்த மண்ணில் அரிதான தொடர் தோல்விக்கு தோற்கடித்தபோது, ​​டெண்டுல்கரின் ஃபார்ம் மேலும் குறைந்தது, நான்கு டெஸ்ட் போட்டிகளில் இருந்து 18.6 சராசரியாக 112 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

உலக நாயக பேட்ஸ்மேன் என்றிருந்தும் அந்த இரண்டு தொடரிலும் தனது திறமையினால் டிரா கூட செய்ய முடியவில்லையே என்பது தான் கிரிக்கெட் வெறியர்களின் ஆதங்கம்.

1988ல் சீக்காவின்

20260213181658194.jpg

கேப்டன்சியில் பாகிஸ்தான் டூர் ஆடிவிட்டு வந்த டீன் டெண்டூல்கரை நேர்காணலுக்கு அவரது இல்லத்திற்குச் சென்றிருக்கிறேன். அவரது மூத்த சகோதரர் அஜித்துடன் அடிக்கடி பேசியதுண்டு.

இந்த சமீபத்தில் முடிவடைந்த T20 உலகக்கோப்பை 2026 டோர்னமெண்ட்டில், மூணு டக்கு , அதிரடி அபிஷேக் ஷர்மாக்கு. அடுத்த ஆட்டத்தில் T20 கிரிக்கெட் தரத்தில் லொட்டோ லொட்டா ஆடி 50 எடுத்தது என்னமோ எனக்கு இவ்வளவு ஏன் இவருக்கு? நம்ம வாஷிங்க்டன் சுந்தர்க்கு ஒரு சரியான முறைப்படியான சான்ஸே வர மாட்டேன் என்கிறதே என்ற படு ஆதங்கம் உண்டு. ஏன்னா? அவ்வளவு தகுதியான ஆட்கள் நம்ம டீமில் உண்டு. சான்ஸ் கொடுத்தால் தானே தன்னுடைய திறமையைக் காட்ட முடியும். திடீர்னு திறமையைக் காமி என்றால் இது என்ன சினிமாவா..கரெக்டா நடிப்பு வர்ர வரையிலும் ரீடேக் எடுக்க? சிலருக்கு அவர்களாகவே ரிடைர்மென்ட் ஆகும் வரை மேலிடம் கேட்பதில்லை. சிலருக்கு ஒரு சான்ஸ் குடுப்பேன் ஒரே பாலில் முப்பத்திரெண்டு ரன் அடிச்சிக் காமி என்று சொன்னால். அந்த விதத்தில், நேற்று, சஞ்சு சாம்சன் பத்து வருஷம் இழந்து விட்டார் என்று அவரது தந்தை விஷ்வனாத் சாம்சன் தோணி, கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் திராவிடைக் குறை கூறியுள்ளார்.

சிலருக்கு எல்லா இடத்திலயும் மச்சம்.

20260213180911119.jpg

1985 ல் முன்னாள் கிரிக்கெட் வீரர் விஜய் மர்சண்ட்டை நேர் காணல் செய்கையில், தனது இரண்டாவது இன்னிங்க்சில் அமர்களமாக ஆடிக்கொண்டிருந்தார். ஆமாங்க, பொது மக்களுக்கு தொண்டு, அதாவது, இல்லாதோருக்கு தன் சொந்த காலில் இயங்க வைக்கும் அதாவது, கண்ணியமாக சம்பாதித்து வாழ்வு நடத்த அருளும் ஒரு தன்னார்வலத் தொண்டு நிறுவனம் நடத்திக்கொண்டிருந்தார்.

ஆமாங்க, அவரது முதல் இன்னிங்க்ஸான கிரிக்கெட்டில் அசகாய சூரன் 1951ல் ரிடைர்மென்ட். கடைசி இன்னிங்க்ச் ஸ்கோர் 154 தாங்க. அவர் சொன்னதெல்லாம் அவர்கள் (செலக்டர்ஸ்) why not என்று கேட்குமுன் அதை நீயே உன்னைக் கேட்டுக்கொண்டு விலகி விட்டால், கண்ணியத்தோடு தலை நிமிர்ந்து நடக்கலாமே.

சில பிரபல பேட்ஸ்மேன்களெல்லாம் தன்னுடைய ரெகார்டுகளுக்காக விளையாடுவார்கள், இதனால் டீமும் மோச நிலைக்குத் தள்ளப்படும். வளர்ந்து வரும் இளைய தலைமுறை ஆட்டக்காரர்களின் சான்ஸையும் கெடுத்து விடுவார்கள். இந்த அகோர விளையாட்டில் மலர்ந்தும் மலராத ஆட்டக்காரர்கள் நிறைய உண்டு. பல நேரங்களில் இவர் ரிடையராகி விட்டார், அவர் ரிடையர் என்று செய்திகள் வருகையில் பழைய விவரங்களை நோண்டினாலே உண்மை அம்பலமாகிவிடும்.

சொல்ல வருவது என்னவெனில், why not என்று கேட்கு முன் கிளம்பி விட வேண்டும். ஆஸ்த்திரேலியாவின் சீடீவ் வாக்,

20260213181505742.png

கிரெக் சாப்பல் கடைசி டெஸ்ட்டில் முறையே 80, 182 அடித்தவர்கள். இங்கிலாந்தின் அலிஸ்டைர் குக் 125 அடித்து விட்டு குட் பை சொன்னவர்.