இது ஒரே விளம்பரமாக வருவது இல்லை. ஒவ்வொரு விளம்பரத்திலும் வேறுபாடு உள்ளது. விளம்பரம் ஆரம்பத்தில் ஒரு சிறுமியோ, ஒரு பெண்மணியோ, ஒரு முதியவரோ, ஒரு மத்திய வயது ஆண்மகனோ கருப்பு வெள்ளையில் அழுவது போல் ஆரம்பித்து "இருண்ட காலம்" என்று தொடங்கும் அந்த விளம்பரத்தில் உரிமையை காப்போம் என்று சொல்லி கருப்பு வெள்ளையில்
1. Ban NEET, 2. Anti CAA , 3. எலும்பு கூடுகளுடன் அய்யாக்கண்ணு செய்த போராட்டம் என்று காட்டுகிறார்கள்.அது மட்டுமில்லாமல் இந்த அரசு வரும் முன் தமிழகத்தில் வறண்டு இருந்ததாகவும், பயிர்கள் வாடிவிட்டகவும் காட்டுகிறார்கள் . 4. அரசு அதிகாரிகள் மக்களை மிரட்டுவதாக காட்டுகிறார்கள். இப்படி காட்சிக்கு காட்சி பொய் பிரச்சாரம் செய்வதை எப்படி எதிர்க்கட்சிகள் ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறார்கள்? இந்த விளம்பரம் இந்த அரசின் சாதனைகளை காட்டவில்லை. எதோ திமுகவிற்க்கான அதாவது திருக்குவளை முத்துவேல் பரம்பரை கழகத்திற்க்கான பிரச்சார விளம்பரமாக இருக்கிறது. அரசு என்பது எந்த கட்சி ஆட்சி செய்தாலும் ஒரே ஆட்சிதான், அதே அதிகாரிகள்தான். அப்படி இருக்க எப்படி இதுபோல "உரிமையை மீட்போம்" என்று சொல்லி விளம்பரம் வருகிறது என்பது புரியவில்லை.
இது மக்களின் வரிப்பணத்தில் செய்யும் ஒரு பொய் விளம்பரம், திமுகவிற்கு செய்யப்படும் அப்பட்டமான விளம்பரம். இதை எதிர்த்து ஏன் வழக்கு தொடுக்க கூடாது முதல்வரே?
நீட் தேர்வை கொண்டுவந்தது மன்மோகன் அரசு. அந்த மசோதாவை தாக்கல் செய்தவர் அன்றய திமுக அமைச்சர் காந்தி.நீங்களே நீட் தேர்வை கொண்டு வருவீர்களாம். பிறகு நீட் தேர்வு தமிழத்தின் உரிமையை பறிக்கும் செயல் என்று நீலி கண்ணீர் வடிப்பீர்களாம். அதே அரசு, அதே அதிகாரிகள், அதே தமிழக மக்கள். அப்பொழுது தெரியவில்லையா அது தமிழகத்தின் உரிமையை பறிக்கும் செயல் என்று?
இது ஒரு பக்கம் இருக்கட்டும். தமிழகத்தில் பாலரும் தேனாறுமா இன்று ஓடுகிறது திருக்குவளை முத்துவேல் பேரனாரே? உங்கள் ஆட்சியில் தான்
1. சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோவையில் இளம்பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளானார்கள்,அதுவும் உங்கள் விடியல் ஆட்சியில் தான் என்பது மறந்துவிட்டதா? இல்லை அதுவும் உங்கள் அரசின் சாதனையா?
2.இன்று வரை நீங்களோ உங்கள் கட்சியினரே வேங்கைவயலுக்கு போகவில்லை.இதுதான் நீங்கள் சமூகநீதி உரிமையை மீட்ட செயலா?
3. கரூரில் விஜய் கூட்டத்தில் இறந்தவர்களை பார்க்க 45 நிமிடத்தில் பறந்த நீங்கள் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களை காண செல்ல பல நாட்கள் ஆனது ஏன்?
4. கோயில் பாதுகாவலர் அஜித் குமாரை கொலை உங்களுக்கு மறந்து விட்டதா? இதுவும் உங்கள் அரசின் சாதனையா?
5. தினந்தோறும் போதை ஆசாமிகள் செய்யும் குற்றங்கள், கொலைகள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?
6. துப்புரவு பணியாளர்களை உங்கள் அரசு நடத்தியது மறந்து விட்டதா? அவர்கள் உரிமை பறிக்கப்பட்டால் பரவாயில்லையா?
7. மாணவர்கள் இதுவரை பசியால் வாடி பள்ளிக்கு சென்றதாகவும் உங்கள் அரசு காலை உணவுத் திட்டம் தீட்டி அவர்களின் பசியை போக்கியதாகவும் சொல்லும் நீங்கள் உங்கள் தந்தையார் தலைமையில் 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்த போது அவர்கள் பசியில் வாட வில்லை? நீங்கள் அடிக்கடி சொல்லும் "புருடா" விடுவதற்கும் ஓர் அளவு உண்டு திருக்குவளை முத்துவேல் பேரனாரே.
8. லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு அரசு வேலை கொடுத்ததாக சொல்லும் நீங்கள் உங்கள் அரசால் 9000 பேர் எழுதும் குரூப் 2 தேர்வை ஒழுங்காக நடத்த முடியவில்லை என்பதும் உங்கள் சாதனையா?
9. அரசு பணத்தில் ஆண்டுக்கு ஆண்டு வெளிநாட்டு பயணம் செய்து திட்டங்கள் கொண்டுவந்ததாக சொல்லும் நீங்கள், தமிழகத்தை விட்டு ஆந்திரா தெலுங்கானா, கர்நாடகாவுக்கு செல்லும் திட்டங்களை பற்றி எதுவுமே சொல்லுவதில்லையே ஏன்? டைடெல் பார்க் ஆரம்பிக்க சொல்லும் நீங்கள் அவை காலியாக இருப்பதை மறைப்பது ஏனோ?
10. 100 கோடியில் உங்கள் உங்கள் தகப்பனார் பெயரில் மிக பிரமாண்ட நூலகம் காட்டினீர்கள் ஆனால் உங்கள் சொந்த ஊர் திருகுவளையில் உள்ள நூலகத்தில் மழையின் பொழுது ஒழுகி நூல்கள் நாசமாவதை தடுக்க ஒரு சில லட்சங்கள் செலவிடாதது ஏன்? உங்கள் சொந்த ஊர் ஏழை மாணவர்கள் அவதிப்பட்டால் பரவாயில்லை ஆனால் உங்கள் தந்தையின் பெயரில் பெரிய நூலகம் கட்டி விளம்பரம் செய்யவேண்டும் அப்படித்தானே?
11. சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கட்டியுள்ள பல்நோக்கு மருத்துவமனை மத்திய அரசின் அதாவது உங்கள் பாஷையில் சொல்வதென்றால் ஒன்றிய அரசின் பாக்களிப்போடுதானே கட்டப்பட்டது? அதுவும் அதற்கான முதற்கட்ட வேலைகள் கடந்த அதிமுக ஆட்சியிலேயே தொடங்கி விட்டது கொரோனா காலம் என்பதால் அதன் பணிகள் தொடரவில்லை. அதை முடித்து உங்கள் தந்தையின் பெயரை வைத்து அதற்கு நீங்கள் மட்டும் பெயர் தட்டி செல்வது ஏனோ?
12.தமிழகத்தின் பொருளாதாரத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக கொண்டுவருவதாக சொல்லும் நீங்கள் தமிழத்தின் கடனை 10 லட்சம் கோடி கடனுக்கு உயர்த்தி இருக்கிறீர்கள் அது டிரில்லியன் டாலருக்கு நிகர் என்பதுதான் உங்கள் சாதனையா?
திருக்குவளை முத்துவேல் பேரனாரே இதுதான் நீங்கள் எங்கள் உரிமையை மீட்ட செய்யலா? இதுதான் உங்கள் ஆட்சியின் சாதனையா? சொல்லுங்கள்? அல்லது நீங்கள் அடிக்கடி சொல்லும் "புருடா"வா? சொல்லுங்கள் முதல்வரே. இதுதான் தமிழகத்தின் உரிமையை மீட்ட செயலா?
தொடர்கள்
அரசியல்

Leave a comment
Upload