தொடர்கள்
அனுபவம்
நினவலைகள் : நா பார்த்தசாரதி – அம்பத்தூர் ரங்கராஜன்

20260213215249767.jpg

அரவிந்தன் - பூர்ணிமா நாயகன், நாயகி.

தீபம் நா.பார்த்தசாரதி பற்றி தெரியவேண்டுமானால் அவரின் நாவலைப்படித்த ரசிகர்கள் தங்களுடைய மழலைச்செல்வங்களுக்கும் வைத்த பெயர்களைத்தான் இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன். அன்று தமிழகத்தில் இந்த பெயர்களை தனது கதையில் அறிமுகப்படுத்தியவர் அவரே.

நா.பா வின் எழுத்து வித்தியாசமான முறையில் இருக்கும். படிப்பவரை கதையோடு ஒன்றிட வைக்கும்.

நான் மேற்கு மாம்பலத்தில் வசித்த காலத்தில் ஒரு 15 நாட்கள் காலை சிஐடிநகரில் இருந்த அவர் வீட்டுக்குக்காலையில் சென்ற சமயங்களில் நான்,நா.பா,அவரின் மகன் மற்றும் ஒரு நாயைக்கையில் பிடித்த படி சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை நடைப்பயிற்சி பின் சிஐடி நகர் அவர் வீடு வரை திரும்புதல். மறக்க முடியாத அனுபவம் அது.

பிறகு அவர் கொஞ்ச நாள் திணமணி நாளிதழில் ஆசிரியராக இருந்தார்.

அவரின் நீலநயனங்கள் என்ற நாவல் இன்னும் நினைவில் உள்ளது.

குறிஞ்சிமலர் நாவலில் வெளியான நாயகன் நாயகி பெயரே அரவிந்தன்&பூர்ணிமா. இப்பெயரை வைக்காத நாபாவின் ரசிகர் இருக்க முடியாது.இந்த நாவல் சின்னத்திரையில் பொதிகையில் ஒளிபரப்பாகியது.

அதில் அரவிந்தனாக நடித்தவர் தான் இன்றைய முதல்வர் என்பது பலருக்கு தெரியமா ??

நா பாவின் குறிஞ்சி மலர் சீரியல் ஸ்டாலின் நடித்த சீரியல்....