தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20260214070931902.jpg

Heading : காதல் காதலைக் காதலிக்கிறது - 2 என்.குமார்

Comment : சொல்லிய காதல் தாம்பத்யத்தில் அழகானது..... சொல்லாத காதல் உன் பத்தியத்தால் அழகானது

Jenifer , Dubai

Heading : சஞ்சு சாம்சன் சொல்லும் பாடம் - லண்டன் கோமதி

Comment : இதில் ஞாபகத்தில் கொள்ள வேண்டியது என்ன என்றால் சில வாய்ப்புகள் அவருக்கு மறுக்கப்பட்டது... ஒரு சில வாய்ப்புகள் தந்தும் பிரயோஜனம் இல்லாமல் போனது காரணம் அவருடைய ஓப்பனிங் ஸ்லாட் தராமல் 5டவுன் அல்லது 6டவுன் போல சான்ஸ் தந்ததும் ஒரு முக்கிய காரணம்.... இந்த தவறுக்கு காப்டனும், கோச்சும் முழு பொறுப்பு எடுக்க வேண்டும்

Sriram S , Chennai

Heading : தேர்தல் கரிசனம்

Comment : தேர்தல் நேரம் (தேர்தலுக்கு கொஞ்சம் முன்னால்) மட்டுமே வரும் இந்த கரிசனம்😡 பிறகு சனம் எல்லாம் மறந்து போகும்..

Sriram S , Chennai

Heading : தேர்தல் கரிசனம்

Comment : அரசாங்க பணம் (மக்கள் பணம் தானே) எடுத்து மக்களுக்காக செலவழிக்க அறிவிப்பு கொடுக்கிறார்...... அமல் படுத்த இவர் ஆட்சியில் இருப்பாரா?!?......

Sriram S , Chennai

Heading : ஆஃப் தி ரெகார்ட் - சுந்தர மணிவண்ணன்

Comment : நல்ல நடையில் எழுதப் பட்டக் கதை. வேகமாகவும் விறுவிறுப்பாகவும் கதை நகர்கிறது. சட் சட்டென நகரும் சம்பாஷணைகள் கதையின் முடிச்சை அழுத்தமாகப் போடுகின்றன. என்ன என்ன என்ற பரபரப்புத் தொற்றிக் கொள்கிறது. கடைசி வரையில் அந்த பரபரப்பை நீட்டி இருக்கிறீர்கள். வாழ்த்துகள். உங்கள் எழுத்தில் மிக அருமையான முன்னேற்றம் தென்படுகிறது.

Ananth Ravi, Chennai

Heading : சினிமா சினிமா சினிமா- லைட் பாய்

Comment : பூஜா ஹெக்டேக்கு நல்ல நேரம்... வந்துட்டதால காஸ்ட்லி வாட்ச் கட்றாங்களா.... காஸ்ட்லி வாட்ச் கட்டினதால நல்ல நேரம்தான்னு சொல்றது..?

எம். ஆர். மூர்த்தி, மும்பை.