தொடர்கள்
தேர்தல் திருவிழா
மொட்டைக்கு மவுசு - சிந்தனையும் சித்திரமும் தேவா

தேர்தல் ரிசல்ட்டோ வந்தாச்சு. டீவீ சானல்கள் பிசி.

அந்த சலூனின் வாசலில் ஒரு தகவல் பலகை..

20260405211139409.jpeg

தயவு செய்து வாடிக்கையாளர்கள் அடுத்த ஒரு வாரம் கடைக்கு வரவேண்டாம். ஆனால் கடை லீவு இல்லை.

இப்படி மொட்டையாக காரணமில்லாமல் ஒரு தகவல் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்த விசித்திர அறிவிப்பைக் கண்டு துணுக்குற்ற ஒரு வாடிக்கையாளர் சலூன் முதலாளியைக்கேட்டார்.

அவர் சொன்னது : ஓ!..அதுவா, நம்ம தொகுதியில் ஜெயிச்ச வேட்பாளரின் தொண்டர்கள், நேர்த்திக்கடனுக்கு மொட்டைபோட வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

தோற்ற வேட்பாளரின் தொண்டர்கள், கவலையில் மொட்டை அடித்துக்கொள்ள வந்து கொண்டே இருக்கிறார்கள்.

தேர்தலுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு கல்வியாண்டில் கட்டணத்தை செலுத்திவிட்டு மொட்டை போட்டுக்கொள்ள வருகிறார்கள்.

எனவே அடுத்த ஒரு வாரம் சலூன் பிசி.