தொடர்கள்
தேர்தல் திருவிழா
மேற்கு வங்க தேர்தல் இன்னமும் நீதி கிடைக்கவில்லை - பால்கி

20260405222100431.jpeg

இவரது பெயர் திருமதி ரத்னா தேப்னாத். பனிஹாட்டி தொகுதியில் பாஜகவின் சார்பாக நின்று ஜெயித்திருக்கின்றார்.

திரினாமூல் காங்கிரஸை தோற்கடிக்கும் வரை தலை முடிவதில்லை என்று சபதம் செய்திருந்தார். இதுநாள் வரை மறுக்கப்பட்ட நியாயம் இனியாவது தாமதமின்றி அவருக்கு கிட்டட்டும்.

மேற்கு வங்கத்தில் சுந்தர்பன்ஸின் அருகே இருக்கும் சந்தேஷ்காளி என்னும் சிறு தீவு.

2024 பிப்ரவரியில் திரினாமூல் காங்கிரசைச் சேர்ந்த ஷேக் ஷாஜஹான் மற்றும் அவரது கூட்டாளிகளால் பாதிக்கப்பட்டவர் கீழே உள்ள படத்தில் இருக்கும் ரேகா பாத்ரா. இந்த முறை சட்டசபை தேர்தலில் பாஜகவின் சார்பில் நின்று ஜெயித்திருக்கிறார்.

20260405222124329.jpeg