தொடர்கள்
அரசியல்
யாரிந்த சுபெந்து அதிகாரி - விகடகவியார்

20260409064657834.jpg

மேற்கு வங்காளத்தின் 9வது முதலமைச்சர்.

55 வயதேயான சுபெந்து அதிகாரி.

பிறந்தது செப் 1970

திருமணம் ஆகவில்லை. அப்பா பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

நந்திகிராம் தொகுதியில் உள்ளாட்சியில் துவங்கிய இவரது வாழ்க்கை.... கம்யூனிஸ்டுகள் 10,000 ஏக்கரில் ஒரு தொழிற்பேட்டை துவங்குவதாக அறிவித்த போது.. திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அதை எதிர்த்து களமிறிங்கியவர்.

படிப்படியாக முன்னுக்கு வந்து எம்.எல்.ஏ வாகி, மந்திரியாகி இவரது அரசியல் பயணம் அசாத்தியமாந்து.

மாவோயிஸ்டுகளுக்கு ஆரம்ப காலத்தில் ஆயுதம் சப்ளை செய்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.

2020ல் தான் பாரதிய ஜனதாவுக்கு கட்சி மாறினார்.

2026 தேர்தலில் நந்திகிராம் மற்று பபானிபூர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு பபானிபூரில் மம்தா பானர்ஜியை ஏராள வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி, இரண்டு தொகுதிகளையும் வென்றிருக்கிறார் சுவெந்து.

மேற்கு வங்கத்தில் சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிஸ்ட், காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி பாஜக அரசு அமைகிறது.

வழக்கம் போல் மமதைக்குப் பெயர் போன மம்தாவுக்கு இதை ஏற்றுக் கொள்ளவேமுடியைவில்லை.

ராஜினாமா செய்ய மாட்டேன் என்று டிரம்புக்கு தங்கை போல அடம் பிடித்த மம்தாவை சமாளித்து 9ந் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்கிறார் சுவெந்து அதிகாரி.

இதற்கிடையே தேர்தல் முடிவு வெளி வந்த உடனேயே அவரது உதவியாளரை அடையாளம் தெரியாத நபர்கள் பைக்கில் வந்து துப்பாக்கியா சுட்டு கொன்றிருக்கிறார்கள்.

எப்போதுமே வன்முறைக்கு பெயர் போன இடம் மேற்கு வங்கம்.

சட்டம் ஒழுங்கு தான் சுபெந்துக்கு எதிராக இருக்கும் மிகப் பெரிய சவால்.

20260409071623933.jpg