
தமிழக வெற்றி கழக தலைவர் திராவிட முன்னேற்றக் கழகம், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து பெரும்பான்மை கிடைக்காமல் திமுக கூட்டணி கட்சி தயவில் அதிமுகவை இரண்டாக உடைத்து ஒரு அணியை தனது ஆதரவாளராக மாற்றி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கிறார் ஜோசப் விஜய்.
இப்போது அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களை அவசர அவசரமாக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து உடனடியாக அதைப் பேரவை தலைவர் ஏற்று அந்த இடங்கள் காலியிடங்களாக அறிவிப்பதில் காட்டி இருக்கும் அக்கறையில் இருந்தே இது குதிரை வேக அரசு அல்ல குதிரை பேர அரசு என்பதை வெளிக்காட்டி இருக்கிறார் ஜோசப் விஜய்.
இதுவரை நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். இன்னும் சிலர் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யிருக்கிறார்கள் என்ற பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது. இது ஒரு மோசமான உதாரணம் என்று இந்த ஆட்சியை தக்க வைக்க ஆதரவு தெரிவித்த கட்சிகளே விமர்சனம் செய்கின்றன.
கட்சித்தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அதிமுக பேரவைத் தலைவரிடம் மனு தந்திருக்கும் போது அந்த மனுவின் மீது பேரவை தலைவர் எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் இவர்கள் ராஜினாமா ஏற்பு நிறைய சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் ஆரம்பமே அலங்கோலம் என்பதுதான் ஜோசப் விஜயின் ஆட்சி அடையாளம் என்று ஆகிவிட்டது.

Leave a comment
Upload