தொடர்கள்
வலையங்கம்
விளக்கம் வேண்டாம்

20260527073954116.jpeg

தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் அமர்ந்த இந்த 40 நாட்களில் பல இடங்களில் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக போராட்டம் சாலை மறியல் என்று மக்கள் ஈடுபடுகிறார்கள். சுதந்திரம் வாங்கி 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் மின் பிரச்சனைக்கும் குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு இல்லை என்பது வெட்கப்பட வேண்டியது. 50 ஆண்டுகால திராவிட ஆட்சி வெறும் வெற்று விளம்பரங்கள் மூலம் ஆட்சி நடத்தினார்கள் என்பதற்கு இந்தப் போராட்டங்களே சாட்சி.

மழை காலங்களில் தண்ணீர் விரயமாகி கடலில் கலக்கிறது. தமிழகத்தில் உள்ள நதிகளை ஒன்றாக இணைத்தாலே தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனை எளிதில் தீரும். இதன் மூலம் விவசாயிகள் பிரச்சனை குடிநீர் பிரச்சனை எல்லாமே தீரும். அதே போல் சென்ற ஆட்சி குறைபாடுகளைப் பற்றி விளக்கம் சொல்லாமல் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று யோசிக்க வேண்டும் அதற்காக தான் 50 ஆண்டுகால திராவிட ஆட்சியை மக்கள் புறக்கணித்துவிட்டு உங்களுக்கு வாய்ப்பு தந்திருக்கிறார்கள். சினிமா டயலாக் எல்லாம் பேசாமல் உண்மையான ஆட்சியை முதல்வர் விஜய் நடத்தட்டும்.