
வேலுமணி சி.வி.சண்முகம் உட்பட மேலும் 10 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விலக முடிவு.
கிட்டத்தட்ட இன்னொரு சட்டமன்றத் தேர்தல் நடக்கும் போல தெரியுது, இத வச்சு தான் திமுக ஆட்சி மாற்றம் வரும் என்று சொல்லுதோ என்னவோ ?
விஜய் இன்று மாலை பெரம்பூர் தொகுதி வருகை.
தீய சக்தி திமுக பற்றி பேச ஸ்கிரிப்ட் ரெடி தானே ?
இன்னும் ஆறு மாதத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆட்சி கட்டிலில் அமர்வார் அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேச்சு.
எஸ்.பி.அலுவலகத்தில் ஏதோ தகவல் சொல்லி அனுப்பி இருக்காங்க !!
குதிரை பேர வழக்கு செந்தில் பாலாஜி இன்னும் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை !!
அந்த ஓடு ஓடு ஓடு பாட்டு நெஜம்தானா !!
பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு குழுவில் ஐந்து உறுப்பினர்களை சேர்க்க தமிழக அரசு சட்டத்திருத்தம் அதிகாரிகள் தகவல்.
மக்கள் பவனும் கோட்டையும் ஒன்னுக்குள்ள ஒன்னு ஆயிடுச்சு ?
தேவையின்றி பள்ளிகளுக்குள் சென்றால் கட்சியிலிருந்து நீக்கம் தமிழக வெற்றி கழகத்தினருக்கு அமைச்சர் ஆனந்த் எச்சரிக்கை.
சும்மா இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருப்பார் ?
பாஜகவின் மதவாத அரசியலுக்கு தமிழக அரசு இணங்க கூடாது திருமாவளவன் வேண்டுகோள்.
அண்ணன் எப்பவுமே தமாஷா பேசுவார் !!
எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கவர்னரிடம் திமுக புகார் .குதிரை பேரத்தை உறுதிப்படுத்தும் வகையில் பேசியதாக ஜோசப் விஜய்க்கு வில்லன் இந்த முன்னாள் அதிமுககாரங் தான் !!
ஆதம்பாக்கத்தில் புகார் கொடுக்கச் சென்ற கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளரை போலீஸ் தாக்கியதாக பரபரப்பு.
வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தா இப்படித்தான் நடக்கும் !!
நேர்மையான அரசியலை செய்வோம் அண்ணாமலை பரபரப்பு பேச்சு.
அப்படியா சொல்றீங்க !!
முதல் மந்திரிகளை நீக்குவதற்கு பதிலாக இடைநீக்கம் செய்யலாம் மத்திய அரசுக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை.
ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல !!
தமிழக வெற்றி கழக ஆட்சியை விளையாட விட்டு மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.
பாஜக கூட்டணியில் அண்ணன் இல்லையா !!
நான் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றேன் நான் ஓடி ஒளியவில்லை ஏ.வா வேலு பேட்டி.
எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே !!
தமிழக வெற்றி கழகம் ஒவ்வொரு சனிக்கிழமையும் வார சந்தை நடத்தி அதிமுகவினரை சேர்க்கிறது புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சனம்.
இப்ப எல்லாரும் ஸ்கிரிப்ட் ரெடி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க போல தெரியுது !!

Leave a comment
Upload