திரிஷா

"நான் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு போனாலும் முதல் 32 நிமிடங்கள் ஜாலியாக இருப்பதாகவும், அதற்குப் பிறகு எப்போது வீட்டுக்கு போவோம் என என் மனம் நினைக்கத் தொடங்கி விடுகிறது " என்ற திரிஷாவின் பதிவு இப்போது வைரலாகி கொண்டு இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சமந்தா

சென்னையில் தமிழ்நாடு முதல்வர் விஜய்யை சந்தித்தார் சமந்தா. அவர் நல்ல தமிழ் கதைகள் அமைந்தால் மீண்டும் நடிக்க தயார் என்று கூறினார்.
மமீதா பைஜு

மமீதா பைஜூ நடிக்க இருந்த இரண்டு படங்களில் இப்போது 'இதயம் முரளி 'படத்தில் நடித்த ப்ரீத்தி முகுந்தனுக்கு அந்த வாய்ப்பு போய் இருக்கிறது. இதைக் கேள்விப்பட்ட மமீதா பைஜு அதிர்ச்சி.
ரோஜா
தற்போது மீண்டும் சினிமா ஆசை வந்து படத்தில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார் ரோஜா. அம்மன் கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே அவர் நடித்த நூறாவது படமான பொட்டு அம்மன் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் இந்த முடிவு.
ஷாலினி
அஜித்தின் திருமதி ஆகிவிட்ட ஷாலினி அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அஜித்தின் 64-வது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் ஷாலினி. இதற்கு அஜித்தின் வற்புறுத்தல் தான் காரணம். 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேக்கப் போட இருக்கிறார் ஷாலினி.
யாஷிகா ஆனந்த்

" நான் இப்போது பார்ட்டிக்கு எல்லாம் செல்வதில்லை. ஐந்து வருடம் ஆகிவிட்டது. ஆனால் வழக்கம் போல எங்க வீட்டில் பார்ட்டி நடக்கும். லைட் மியூசிக் இருக்கு ஆல்கஹாலும் இருக்கும். ஆனால் நான் குடிக்க மாட்டேன் "என்று 'இப்போதும் நீங்கள் பார்ட்டிக்கு செல்கிறீர்களா? என்ற கேள்விக்கு யாஷிகா சொன்ன பதில் இது.
ராஷ்மிகா

ராஷ்மிகா கணவர் விஜய தேவரகொண்டாவுடன் ' ரணபலி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர மைசா படத்தில் சண்டைக் காட்சிகள் நடிக்கும் போது இடுப்பில் அடிபட்டு விட்டது. இதனால், ஆறு வாரம் பெட் ரெஸ்ட் படுக்கையை விட்டு எழக்கூடாது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.
ரம்யா ரங்கநாதன்
"என் நடனம் பிடித்து விட்டதால் என்னை சினிமாவுக்கு இழுத்து வந்தது தனுஷ் தான். அதனால் தான் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் 'வாய்ப்பு கிடைத்தது "என்கிறார் ரம்யா ரங்கநாதன்.
சாய் பல்லவி
ராமாயண படத்தில் சீதையாக நடிக்கும் சாய் பல்லவியின் கூந்தலை வைத்து ஒரு சலசலப்பு கிளம்பி இருக்கிறது. சாய் பல்லவிக்கு சுருள் முடி இருக்கிறது. ஆனால் "சீதைக்கு சுருள் முடி இருந்தது என்று எங்கேயும் குறிப்புகள் இல்லை" என்கிறார் ராமாயணம் தொலைக்காட்சி தொடரில் சீதையாக நடித்த தீபிகா.
நஸ்ரியா
நஸ்ரியா விரைவில் அம்மாவாக போவதாக அவரின் மிக நெருங்கிய வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. இளம் சிவப்பு நிற புடவையில் தனது கணவர் பகத் பாசிலுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். சில நிமிடங்களில் லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளி இருக்கிறது இந்த புகைப்படம்
மிருணாள் தாக்கூர்

தனுஷ் உடன் இணைந்து பேசப்பட்ட மிருணாள் தாகூர் இப்போது கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெயஸ்வாலுடன் சுற்றி வருவதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. சமீபத்தில் ஜோடியாக மும்பை பகுதியில் உள்ள கபேவில் தென்பட்டாளர்களாம். கிரிக்கெட் வீரர் நடிகை விட 11 வயது இளையவராம்.
கீர்த்தி சுரேஷ்

திருமணத்துக்குப் பிறகு பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லை. எனவே இப்போது தெலுங்கு படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு நடனமாட போகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். .
மிருணாளினி ரவி
விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ், விஷாலுடன் எனிமி, விஜய் ஆண்டனி ஜோடியாக ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்த மிருணாளினி ரவி தன் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ ஒன்றை அப்லோட் பண்ணி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். அதில் தன் காதலரை இறுக்கமாக கட்டிப்பிடித்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து "உன்னை நேசிப்பது இறுதியாக என்னை நேசிப்பது போல் உணர்கிறேன். ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நான் உன்னையே தேர்ந்தெடுப்பேன் " உருகி உருகி காதலோடு பதிவிட்டிருக்கும் நடிகையின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் இளைஞர் வேறு யாரும் அல்ல ஆன்மீகப் பேச்சாளர் ஆன மகாவிஷ்ணு கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மறுபிறப்பு பாவம் புண்ணியம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைது செய்யப்பட்டவர்.

Leave a comment
Upload