
தமிழ்நாட்டில் காவிரி நீர் திறந்து விடச் சொல்லி உச்சநீதிமன்றம் வாசலில் நிற்க வேண்டிய கட்டாயத்துக்கு தமிழக அரசு ஆளாகி இருக்கிறது.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது தான் காவிரி விவகாரத்தில் விவசாயிகளின் நிலைமை. .
ஜூலை 29 முதல் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி திறந்து விடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது.
கர்நாடகா அரசு இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை.
அதற்கு பதில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காவிரி விவகாரத்தில் கர்நாடக விவசாயிகள் நலன் பாதுகாப்பதில் எங்கள் அரசு முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது.
குடிநீர் தேவைகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிப்பதுடன் சட்ட மற்றும் விவசாயதத்துறை நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்தார் கர்நாடக முதல்வர் டி .கே .சிவகுமார்.
ஆகஸ்ட் 13-ஆம் தேதி மாநிலம் முழுவதும் 12 மணி நேர பந்த் நடக்கும் என்று கன்னட அமைப்புகள் அறிவித்தன.
மூன்றாம் தேதி தமிழக முதல்வரை வருமாறு அழைத்த கர்நாடக முதல்வர் இப்போது சூழ்நிலை சரியில்லை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்
இந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை மேட்டூரில் இருந்து திறக்கப்படவில்லை.
இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுமையாக பாதித்தது .எனவேதான் தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்து விட கர்நாடகா அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியது.
கர்நாடகம் தமிழகம் இடையிலான காவிரி நீர் பங்கீடு பற்றிய பிரச்சனைக்கு காவிரி தீர்ப்பாயம் 2007 தீர்ப்பு வழங்கியது.
அதில்,சில திருத்தங்களை இணைத்து உச்ச நீதிமன்றம் 2018-ல் உத்தரவிட்டது.
அந்த தீர்ப்பு படியான காவிரி நீரை கர்நாடகா திறப்பதில்லை என்பதால் தான் பிரச்சனை தொடர்ந்து நீடிக்கிறது.
ஜூலை 28-ஆம் தேதி நடந்த காவிரி ஆணையத்தின் 139-வது கூட்டத்தில் தமிழகத்துக்கான நீர் பங்கிட்டை தாமதமின்றி வழங்க வேண்டும்.
15 பில்லி குண்டுலுவில் வினாடிக்கு 3500 கன அடி நீர் கிடைப்பது உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை பில்லி குண்டூலு எல்லைக்கு வெறும் 158 முதல் 550 கன அடி வரை மட்டுமே நீர் வந்து சேர்ந்தது.
கிருஷ்ணராஜ சாகர் அணையில் 23.078 டி எம் சி, கபினி அணையில் 18.610 டி எம் சி, ஹாரங்கி அணையில் 7.827 டி எம் சி, ஹேமாவதி அணையில் 28.022 டி எம் சி என மொத்தம் 77.537 டி எம் சி நீர் உள்ளது .
விகிதாச்சார அடிப்படையில் பிலி குண்டுலுவில் தமிழகத்திற்கு உரிய பங்கு நிரை திறப்பதில் கர்நாடகாவுக்கு எந்த சிரமமும் இல்லை .ஆனாலும் பிடிவாதமாக தண்ணீர் திறக்க மறுக்கிறது கர்நாடகா.
கர்நாடகா பிடிவாதம் காட்டி வரும் இந்த நிலையில் வருண பகவான் தமிழகத்தின் மீது கருணை காட்டினார்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான வயநாடு, குடகு ,ஹாசன் போன்ற பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நான்கு அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கே ஆர் எஸ் அணையில் மற்றும் கபினி அணையில் பெருகிவரும் நீரை தடுத்து வைக்க முடியாது என்பதால் வெள்ள அபாயம் காரணமாக தண்ணீர் திறக்க வேண்டிய சூழல் கர்நாடகாவுக்கு ஏற்பட்டு கபினியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் விடப்பட்டிருக்கிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு ஓரிரு நாளில் நீர் வரத்து நிச்சயம் அதிகரிக்கும். விவசாயிகள் பிரச்சனை ஓரளவு தீரும் கொஞ்சம் கால தாமதமாக.
அதேசமயம் மாநிலத்தில் உள்ள ஆறுகள் ஏரிகள் குளங்களை ஒன்றிணைந்து இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே விவசாயிகளுக்கு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் .சென்றாண்டு நான்கு முறை மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது தண்ணீரை சேமிக்க போதிய வசதி இல்லாததால் அனைத்து நீரும் கடலுக்கு சென்று வீணானது.
கோடை காலத்தில் வறட்ச்சியும் மழை காலத்தில் வெள்ளமும் ஏற்படுவதற்கு காரணம் நமது ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்கள் சரியாக தூர்வாராததும், தூர் வாரியதாக பல கோடி மோசடி செய்ததும் முக்கிய காரணமாகும்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் அதற்கு நீரை எடுத்துச் செல்லும் வாய்க்கால்கள் குளங்கள் உள்ளிட்டவை காலம் காலமாக ஆக்கிரமிக்கபட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஒரு காலத்தில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் நீர்நிலைகள் இருந்த நிலையில், இன்று 50,197 நீர்நிலைகளை காணவில்லை.
நீர்நிலைகள் மக்களின் சொத்துக்கள். நீர்நிலைகள் மீட்பதே நீண்ட கால திட்டமாக வைத்து செயல்படுவதுடன் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள மீதமுள்ள ஏரிகள் குளங்கள் கால்வாய்களை தூர்வாரி ஆழப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இன்னும் ஒரு மாதத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருக்கிறது. அப்போது தமிழகத்திலும் வெள்ளம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன இப்போதே தண்ணீரை பாதுகாக்க நீர்நிலைகளை தூர்வாரி ஒவ்வொரு துளி மழை நீரையும் சேமிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
காவிரியில் வரும் உபரி நிரைசேமிக்கும் வகையில் ஏரிகள் மற்றும் குளங்களுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவதன் வாயிலாக 25 முதல் 30 டிஎம்சி வரை தண்ணீரை நாம் சேமிக்க முடியும் யோசியுங்கள் மிஸ்டர் ஜோசப் விஜய்.

Leave a comment
Upload