தொடர்கள்
கதை
மௌன மொழி- குட்டிபாலா.

20260707163315149.jpeg

சாலையோரம் நின்று பேரணியை கண்காணித்துக்கொண்டிருந்தார்

காவல் அதிகாரி ராஜராஜன். .

திடீரென்று அவர் இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஒரு சிறுவன்

ஓடவும் டேய் என்று துரத்தியவர் அவனைப் பின் தொடர்ந்து அந்த பங்களாவுக்குள்

சென்றார்.

சோபாவில் அமர்ந்திருந்த பெண்மணியிடம் எங்கே அந்தப்பயல்? என்றார்.

இங்கே பையன்கள் யாருமில்லையே" என்றவளை நம்பாமல் சுற்று முற்றும்

பார்த்துவிட்டு திரும்ப நினைத்தபோது ஐயா எங்களை காப்பாற்றுங்கள்; என்ற தீனமான பெண் குரலைத் தொடர்ந்து அந்த சிறுவனும் இரு பெண்களும் வெளியே வந்தனர்.

விசாரணையில் சிறுவன் பிறவி ஊமை என்பதும் அந்த பெண்கள் அவன் சகோதரியும் தாயாரும் என்பதும் தெரிந்தது.

ஆதரவளிப்பதாக ஆசைகாட்டி மூவரையும் கிராமத்திலிருந்து கூட்டிவந்து ஐந்து ஆண்டுகளாக கொத்தடிமையாக வைத்திருப்பதும் தெரிந்தது.

வெளியே நடைபெறும் "கொத்தடிமை ஒழிப்பு பேரணிக்கு தலைமை தாங்குவதே அந்த வீட்டு உரிமையாளர் முன்னாள் எம்எல்ஏ சட்டநாதன் என்பதையும் தெரிந்து கொண்டார்.

ஊமை சிறுவன் கனகனின் சமயோசிதத்தை பாராட்டிய ராஜராஜன் மூவரையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தார்.

படிப்பறிவில்லாத ஊமைதானே என்று கனகனுக்கு சற்றே சுதந்திரம் கொடுத்ததை

எண்ணி சிறையில் வருந்துகின்றனர் சட்டநாதனும் அவர் மனைவியும்.