Wide Angle ரவி @ ரவி ராய்

வைடு ஆங்கிள் ரவி
அது ஒரு காலை பொழுது. பல திரைப்பட மாணவர்கள் மத்தியில் ஒரு பாலுமஹேந்திரனாக, மணிரத்தினமாக, PC ஸ்ரீராமாக , அமர்ந்து தன் கலை பயணத்தை அசை போட்டுக் கொண்டிருந்தார் வைடு ஆங்கிள் ரவி.
மாணவரோடு மாணவராக நாமும் அவரது பயணத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம் .
இந்த கால ஜென் சி மாணவர்கள் கற்பனை கூட பண்ணி பார்க்கமுடியாத ஒரு வாழ்க்கையை அந்த கால கலைஞர்கள் தங்களது கடின உழைப்பால் கடந்து வந்தது குறித்து அவர் ஆற்றிய உரை மாணவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக அவரின் மானசீக குரு பிரபல புகைப்படக்கலைஞர் ரகு ராய் அவர்களை பற்றி குறிப்பிடும்போது அந்த காலத்தில் பிலிம் ரோல் விலை அதிகம் என்பதால் மிக குறைவான படங்களை மட்டுமே பிடிப்போம்.
சில சமயங்களில் ஒரே ஒரு கிளிக் தான் .
அது மிக பெரிய ஹிட் அடித்துவிடும்.
படம் எப்படி வந்திருக்கிறது என்பதை அலுவலகம் வந்து, லேபில் பார்த்தால் மட்டுமே தெரியும். படம் சரியாக வந்திருக்கிறதா அல்லது சொதப்பியிருகிறதா என்பதை பல மணி நேரம் கழித்து தான் அறிய முடியும் என்பதை விவரிக்கும் போது மாணவர்களுக்கு ஆச்சர்யமோ ஆச்சரியம்.
இவர்களில் பெரும்பாலானோர் டிஜிட்டல் உலகத்தில் சகட்டு மேனிக்கு கிளிக்கி தள்ளும் இளைஞர்கள்.
ஏன் வைடு ஆங்கிள் அதிகம் கவனம் செலுத்துகிறீர்கள் என்ற ஒரு மாணவரின் கேள்விக்கு. எனது அடையலாம் அது தான். பெரும்பாலான படங்களை நான் வைடு ஆங்கிளில் எடுத்தால் மட்டுமே எனக்கு திருப்தியாக இருக்கும் என்றார்.
அவரின் ஒவ்வொரு கேண்டிட் அதாவது எதிர்பாராவிதமாக, எதேச்சையாக எடுத்த பல படங்களின் கதைகளை அவர் சொல்லும் போது ஒவ்வொன்றிலும் ஒரு குட்டி கதை இருந்தது.
புகைப்படக்கலைஞனாக , பத்திரிகையாளனாக பணியாற்றியதின் விளைவு சினிமாவில் திறம்பட ஷோபிக்க முடிந்தது என திரைப்பட அனுவத்தையும் பகிர்ந்தார். முதலமைச்சராக இருந்தபோது செல்வி ஜெயலலிதா தன்னுடன் பயணிக்க அழைத்தும் பத்திரிகை துறையின் மீது இருந்த காதலால் தவிர்த்தார் மேலும் அது அவரது சுபாவத்துக்கு சரிவராது என்றும் நினைத்து தீர்க்கமாக இருந்தார்.
ஒரு கலைஞன் பல வித போராட்டங்களையும்,அனுபவங்களையும், சந்தித்து வெற்றிப்பாதையில் பயணிப்பான்.
தன் திறமையின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையில் எதனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து போராடுவான் , பயணிப்பான், ஜெயிப்பான் என்பதற்கு உதாரணம் வைடு ஆங்கிள் ரவியின் பயணம்.
அவரின் சில கிளிக்குகள் உங்களுக்காக







Leave a comment
Upload