
மெதுவாக ஊர்ந்து வந்த நகர பேருந்திலிருந்து விரைந்து இறங்கினான்
கண்ணாயிரம். அது மாதத்தின் முதல் வாரம். எனவே, அவனுக்கு நல்ல வசூல் வேட்டை.
கண்ணாயிரம். பேருந்தில் பிக் பாக்கெட் அடிப்பதுதான் அவனது தொழில். இன்று
அவன் கையில் கிடைத்த பத்து பர்ஸுகளில் ஒன்றில் அவனுடைய தங்கை லதாவின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.வேறு விவரம் எதுவும் அவனுக்கு கிடைக்கவில்லை.
அன்று மாலை கூலி வேலையிலிருந்து திரும்பிய தன் அம்மாவிடம் அந்த புகைப்
படத்தைக்காட்டி விவரத்தைச் சொன்னான்.அவளும் அதிர்ச்சி அடைந்தாள். உடனே சுதாரித்துக் கொண்டவள், தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி மகனை ஒரு வழியாக சமாதானப்படுத்தினாள்.
இன்று மொத்தமாக கிடைத்த சுமார் 4000 ரூபாயை அம்மாவிடம் கொடுத்து விட்டு
உழைத்த களைப்பு நீங்க பகல் தூக்கம் போடத் துவங்கிவிட்டான் கண்ணாயிரம்.
லதா எப்பொழுதுமே மனம் திறந்து பேசாதவள். பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஒரு
தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுபவள்.அவளுடைய வருமானத்தில் தான் குடும்பம் ஓடிக் கொண்டு இருக்கிறது.திடீரென்று ஒரு நாள் அப்பாவை இழந்த அதிர்ச்சியிலிருந்து அவள் இன்னும் மீண்டு வரவில்லை. அவள் அம்மாவிடமும் இவனிடமும் முகம் கொடுத்து சரியாக பேசுவதில்லை ஆனால் அவளுக்குள் இன்னொரு கதை இருப்பது அவனுக்கு இப்போது தான் தெரிய வந்தது.
லதாவிடம் பேசி,’ யார் அந்தக் கள்வன்?’ என்பதை அம்மா கண்டு பிடித்து
விடுவாள்.இதுதான் அவன் நம்பிக்கை.
மாலை தன்னுடைய பள்ளியிலிருந்து வேலை முடித்து வந்த லதா காபி குடித்துவிட்டு டிவியை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அம்மா சற்றே அவள் அருகில் சென்ற அவளிடம்,’உனக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது. எனக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது. சீக்கிரம் ஒரு நல்ல இடமாக பார்த்து உனக்கு திருமணம் முடித்து வைக்க ஆசைப்படுகிறேன்’சொல்லி முடித்தாள் கருப்பாயி, லதாவின் அம்மா.
’அம்மா,அவள் இதெல்லாம் எனக்கு வேண்டாம். நான் இப்படியே இருந்து விட்டு
போகிறேன்’ என்று சொன்னவள் ஏனோ,’எனக்கு ஒரு வாரம் டைம் கொடுங்க ’என்று சொல்லி தொலைக்காட்சியை அனைத்து விட்டு தன்னுடைய அறைக்குள் போனாள்.
உள்ளே போனவள் யாரிடமா பேசிக் கொண்டிருப்பதை அவருடைய அம்மா
துப்பு துலக்கி விட்டாள். ஆனால் உடனே உள்ளே செல்லவும் அவளுக்கும் மனதில்
துணிவு இல்லை.
மறுநாள் காலை லதா குளித்துக் கொண்டிருந்தாள்.லதாவின் ஃபோனுக்கு
அழைப்பு வந்தது. ஃபோனை எடுத்த கருப்பாயி ஒன்றும் பேசவில்லை.
இன்று மாலை நாம் வழக்கப்படி துர்கா கோவிலில் சந்திக்கலாம். ஒரு முடிவு
எடுக்கலாம். ஒரு ஐந்து மணிக்கு வந்து விடு’என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான் எதிர்முனையில் பேசியவன்.
ஃபோனை எடுத்த கருப்பாயியும் ‘ம்’என்று சொல்லி ஃபோனை வைத்து
விட்டாள்.
அன்று மாலை ஊருக்கு வெளியே இருந்த அந்த கோவிலுக்கு கண்ணாயிரம் தன்
தாயுடன் சென்றான். ஒரு இருசக்கர வண்டியில் உயரமான ஒரு பையன் வந்து கோவிலில் காத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து கண்ணாயிரம் அவனிடம் சென்று,’ லதா உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொல்ல சொன்னாங்க’ என்று அவனுடைய ஆர்வத்தைக் கிளறினான்.
ஆனால் அவனோ,’ யாரது லதா? நான் இங்கு சாமி கும்பிட வந்தால் நீங்கள்
ஏதோ வந்து வந்து உளறிக் கொண்டிருக்கிறீர்கள்?’ என்று சீறி விழுந்தான்.
‘என்னங்க? அந்த அம்மாவுக்கு விபத்து ஆகிவிட்டது அவங்க சொல்லித்தான்
நாங்க இங்க வந்தோம். நீங்க என்ன இப்படி பண்றீங்களே’ கேட்டு வைத்தான்
கண்ணாயிரம்.
’இதை உண்மை ’என்று நம்பிய மோகன்’’ சரி. சரி. இப்ப எங்க இருக்காங்க?அவங்க
உயிருக்கு ஆபத்தில் இல்லையே?’என்று அலறிக்கொண்டே, ’வாங்க. அங்க போகலாம்’ என்றான்
’இவன் தான் அந்தக் கள்வன்’ என்பதை புரிந்து கொண்ட கண்ணாயிரமும்
அவனுடைய அம்மாவும் தங்களுடைய இயல்பான நிலைக்கு வந்தார்கள். அவனுக்கு,’தாங்கள் யார்’ என்பதை புரிய வைத்தார்கள்.
’அவன் பெயர் மோகன்.ஒரு வங்கியில் வேலை புரிகிறான். அப்பா அம்மா
இல்லை லதா வேலை செய்யும் பள்ளிக்கு அருகில் தான் அவனுடைய வீடு. அவன்
மனதார லதாவை விரும்புகிறான்’ என்று அவனைப் பற்றி அறிந்து கொண்ட
கண்ணாயிரம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.
‘நீங்கள் ஒரு திருட்டுத் தொழில் செய்வதாகவும்’ என்றாவது ஒரு நாள் மாட்டிக்
கொண்டு சிறைக்குச் சென்று விடுவீர்கள். உங்களுடைய அம்மாவை யார்
காப்பாற்றுவார்கள்?’ என்ற கவலைதான் லதாவுக்கு. அதனால் தன்னுடைய
கல்யாணத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறாள். மனதில் இருந்ததை
போட்டுடைத்தான் மோகன்.
மனம் திருந்திய கண்ணாயிரம் இனி உழைத்து சாப்பிடுவதாய்
உறுதிஅளித்தான்.
இதற்குள் மோகன் அனுப்பிய செய்தியைப் பார்த்து விட்ட லதா அங்கு
வந்தாள். தனக்கு முன்பே அம்மாவும்,அண்ணனும் மகிழ்ச்சியாக மோகனுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து,’ஓ.கே’பச்சைக் கொடிதான்’என்று எண்ணிக் கொண்டே அவர்களை நெருங்கினாள். அடுத்தது என்ன கல்யாண சாப்பாடு தான் வாங்க போய் சாப்பிடலாம்!

Leave a comment
Upload