தொடர்கள்
விகடகவியார்
ஜேசன்சஞ்சய் அப்பா பற்றி சொன்னது

20260706193435740.jpeg

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் சிக்மா என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் விஜய் மகன்.

சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி இந்தப் படத்தின் திரை முன்னோட்டம் வெளியாகிக் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்தது.

தமிழ் ,தெலுங்கில் இரு மொழிகளில் இப்படம் உருவாகி உள்ளது. ஜூலை 31-ஆம் தேதி படம் வெளியாக இருந்தது, ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி போனது.

சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு ஜேசன் சஞ்சய் நேர்காணல் தந்தார் .அந்தப் பேட்டியில் இருந்து கொஞ்சம் ....

"நான் விமானி ஆக வேண்டும் என்று சிறுவயதில் ஆசை இருந்தது. பின் மட்டைப்பந்து வீரராக ஆசைப்பட்டேன். எனக்கு மட்டையாடுதல் பிடிக்கும். ஆனால், பந்து வீச்சு தான் நன்றாக வரும். பள்ளிப்படிப்பை முடிக்கும் போது தான் சினிமா என்று முடிவு செய்தேன். எனக்கு கதை சொல்வதில் பெரிய ஆர்வம். படத்தின் கதை என்று இல்லை. ஒரு சம்பவத்தை கோர்வையாக கதையாக சொல்வது எனக்கு பிடிக்கும். இதனால் எனக்கு தோணும் விஷயங்களை எல்லாம் நான் எழுத ஆரம்பித்தேன். திரைப்படத்துறை பற்றிய படிப்பை படிக்க கனடா சென்றேன். அங்கு படிக்கும் போது சில விளம்பரத் திரைப்படங்களை இயக்கினேன்.. அப்போதுதான் ஒளிப்படக்கருவி பின்னால் பணியாற்றுவதில் எனக்கு ஆர்வம் அதிகரித்தது.

அங்கு நடக்கும் திரைப்பட விழாக்களில் உலக சினிமாக்களை பார்த்தேன். அப்படித்தான் நிவின் பாலியின் ' 'மூத்தோன்' படம் பார்த்தேன். அப்போது அவரை சந்தித்து பேசினேன். இப்போது அவருக்கு அது நினைவிருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அது எனக்கு ஒரு சிறப்பான அனுபவம். படிப்பு முடிந்து இந்தியா வந்ததும் கதை பற்றி விவாதிப்பதற்கென்று ஒரு குழு அமைத்துக் கொண்டேன். நாங்கள் பேசிப் பேசி கதையை உருவாக்கினோம். அதன் பிறகு நான் தயாரிப்பாளரை சந்தித்தேன். எனக்கு யுவன் இசை ரொம்பவும் பிடிக்கும் .ஆனால் ' சிக்மா' படத்துக்கு தமன் இசை அமைத்திருக்கிறார். அதே சமயம் என் படத்தில் யுவன் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

விஜய்யின் வெற்றி பற்றியும் மகன் ஜேசன் சஞ்சய் கருத்துத் தெரிவித்துள்ளார். " இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க புரட்சி . இந்த வெற்றி என்பது எனக்கும், என் தங்கைக்கும் எங்கள் குடும்பத்திற்கும் கூடுதல் பொறுப்பும், பரம்பரை அடையாளத்தை காப்பாற்றி முன்னோக்கி செல்ல வேண்டிய கடமையும் ஆகும் "என்று கூறிய இயக்குனர் சஞ்சய்......

தொடர்ந்து சொல்லும் போது " எனக்கான சொந்த அடையாளத்தையும் பெயரையும் நானே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அப்பா விரும்பினார். அதைத்தான் நானும் நினைத்தேன். எங்கள் எண்ணமும் ஒரே மாதிரியாக இருந்தது. அதே சமயம் உனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் எப்போதும் என்னிடம் கேட்கலாம். ஆனால் அதற்கு முன் அந்த உதவிக்கான முயற்சியை நீயே செய்ய வேண்டும். அவரைப் பொறுத்தவரை எல்லாவற்றையும் நானே நேரில் கற்று அந்த அனுபவத்தின் மூலம் வளர வேண்டும் என்று நினைத்தார். இதற்காக எனது குடும்பத்திற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று சொல்லி இருக்கிறார்.

தனது குடும்பம் பற்றி சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துக்கள் குறித்து அவரிடம் கேட்டபோது " சில நேரங்களில் நல்ல விஷயங்கள் பேசப்படும் சில சமயம் எதிர்மறையான கருத்துக்கள் வரக்கூடும். ஒவ்வொருவரும் தங்களுடைய நோக்கத்தில் கருத்துத் தெரிவிக்கிறார்கள் "என்று அவரிடம் ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டாதம் உங்களை அழைத்து திரைப்படத்தில் ஒரு படம் செய்யலாம் என்று அழைத்தால் இங்கிருந்து எந்த நடிகரை அழைத்துப் போவீர்கள் என்ற கேள்விக்கு அப்பாதான் இரண்டு பேருக்கும் நல்ல கூட்டணி இருக்கும் "என்று கருத்து சொன்ன ஜேசன் சஞ்சய் "இந்த நேர்காணலை ஜேசன் ஸ்டாதம்பார்க்கணும்" என்று நினைக்கிறேன் என்றார்.