
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பீகாரில் ஜன் சுராஜ் கட்சியை தொடங்கி ,சென்ற ஆண்டு நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் அவரும் அவரது கட்சியும் படு தோல்வி அடைந்தது.
பாஜக தேசிய தலைவராக நியமிக்கப்பட்ட நிதின் நபின் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனால் பீகாரின் பாங்கிபூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக நிதின்நபின் இருந்தார் .
இவரது ராஜினாமாவை தொடர்ந்து பாங்கிப்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 30-ஆம் தேதி நடந்தது.
இந்த இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி சார்பாக அதன் பிரசாந்த் கிஷோர் போட்டியிட்டார்.
பாஜக சார்பாக முதலில் அபிஷேக் குமார் சின்ஹா வேட்பாளராக அறிவித்து அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதற்கு மறுநாளே அவர் வேட்பு மனுவை பெற்றார்.
அதன் பிறகு நிரஜ் குமார் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் .
மூத்த தலைவர்கள் இந்த தொகுதியில் போட்டியிட விரும்பிய நிலையில் புது முகத்துக்கு பாஜக வாய்ப்பு தந்தது.
இது பாஜகவின் செல்வாக்கு முக்கிய தொகுதி என்பதால் இந்த முடிவு.
இதனால் பாஜக பெரியளவு இந்த தேர்தலில் தங்கள் உழைப்பை செலவழிக்க வில்லை.
தவிர கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் பெரிய அளவு தேர்தல் பணி செய்யவில்லை.
தில்லியில் நடந்த மாணவர் போராட்டம் பீகாரிலும் பரவியது. ஜூலை 25-ஆம் தேதி பீகார் பந்த் அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தல் நடைபெறும் நேரத்தில் போராட்டக்காரர்களை கலைக்கும் நோக்கத்தில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் ஏ கே 47 துப்பாக்கியால் சுட்ட காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் பரவலாக பகிரப்பட்டது. இந்த போராட்டத்தின் போது 26 வயதான பாரத் பூஷன் திவாரி என்பவர் காவல்துறை என்கவுண்டரில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் இடைத்தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
பிரசாந்த் கிஷோரும் இதை பெரிதாக பேசி பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்.
பாங்கிப்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பாராளுமன்ற நீதிபதிகள் வழக்கறிஞர்கள் உள்ளிட்டபலர் இந்த தொகுதியில் வாக்காளர்களாக இருக்கிறார்கள்.
பீகாரில் இந்த பகுதி கல்வி அறிவு மற்றும் பொருளாதாரத்தில் வளம் பெற்று தொகுதி.
இந்த தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் சாம்ராட் சவுத்ரியை கடுமையாக விமர்சனம் செய்தார் .
நிதின் நபின் உள்பட முக்கிய பாஜக தலைவர்களை அவர் விமர்சனம் செய்யவில்லை. அவரது இலக்கு முதல்வர் என்று இருந்தது. சாம்ராட் சவுத்ரி ஊழல்வாதி குற்றப் பின்னணி கொண்டவர் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். அதன் விளைவு பாஜக வேட்பாளரை விட 19,324 வாக்குகள் அதிகம் பெற்று பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார்.
பீகாரைப் பொறுத்தவரை பிரசாந்த் கிஷோரின் வெற்றி பாஜகவுக்கு நிச்சயம் பின்னடைவு தான் என்கிறார்கள் மூத்த அரசியல் நிபுணர்கள்.

Leave a comment
Upload