
ஒளிரும் திரைகளை அதிகமாக பார்க்கும் குழந்தைகளுக்கு மூன்று வயதிற்குள் ஆட்டிசம் போன்ற அறிகுறிகள் தோன்றும் அபாயம் இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களால் பல செயல்களை சுயமாகவோ விரைவாக செய்து முடிக்க முடியாது என்கிறது இந்த ஆய்வறிக்கை. சிறுவயதில் ஒளிரும் திரைகளைப் பார்ப்பது மூளையின் வேதியியல் மாற்றம் மற்றும் நடத்தையை பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க 18 மாதங்கள் வரை குழந்தைகளிடம் கைபேசியை கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறார்கள். முடிந்தால் அதை மூன்று வயது வரை நீட்டிக்குமாறு அறிவுறுத்துகிறார்கள். பல குழந்தைகள் கைபேசிக்கு அடிமையாகி விட்டதாக அந்த ஆய்வறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மூன்று முதல் ஆறு வயது உட்பட்ட 250 குழந்தைகளின் மனநிலை மற்றும் செயல்பாடுகள் பற்றி தீவிரமாக ஆய்வு நடத்திய பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை இதை தெரிவித்து இருக்கிறது. ஆய்வு செய்த 250 குழந்தைகளில் 150 பேர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் டிஜிட்டலுக்கு அடிமையாவது, தூக்ககுறைபாடு, ஒடியாடி விளையாடாதது போன்றவை ஆட்டிசம் ஏற்படுத்தும் என்கிறார்கள்.
எய்ம்ஸ் மருத்துவமனை கூறியுள்ள விஷயத்தையே இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகம் உள்பட மேலும் சில பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் சொல்லி இருக்கிறது. குழந்தைகள் வளர்ச்சியில் முதல் 1001நாட்கள் மிக முக்கியமானது .குழந்தைகள் பேச, பல்வேறு விஷயங்களைப் பார்க்க , சிந்திக்க ஆரம்பிப்பது இந்த பருவத்தில் தான்.
இந்த காலகட்டத்தில் குழந்தைகளிடம் செல்போன் தரக்கூடாது என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. ஒரு காலத்தில் இயற்கையோடு அதிகம் கலந்தவர்களாக குழந்தைகள் இருந்தனர். பறவைகள், நாய்கள், மாடுகள் ,யானைகள் ,செடி கொடிகள், மலர்கள் இன்று எல்லாவற்றையும் நேசித்தார்கள்.
இரவு நேரங்களில் தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்டுக் கொண்டு உறங்கினார்கள். வெயில் காலங்களில் வியர்வை சொட்ட சொட்ட விளையாடினார்கள். செயற்கையான உலகுடன் தொடர்பு இல்லாமல் இருந்தனர்.
இப்போது அவை இல்லாமல் போய் விட்டதுகுழந்தைகளின் எதிர்காலத்தை கருதி பாரம்பரிய விளையாட்டுகள் விளையாட ஊக்குவிக்க வேண்டும். நாமும் செல்போனை தவிர்த்து குழந்தையுடன் நேரத்தை செலவிட வேண்டும்.
தாத்தா பாட்டிகளுடன் குழந்தைகள் வளரும் சூழ்நிலை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். இதெல்லாம் தான் குழந்தையை காப்பாற்றும்.

Leave a comment
Upload