
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
நடமாடும் தெய்வம் - பாகம் - 17
நாடக உலகில் மகளிரை மட்டும் வைத்து கடந்த 30 வருடங்களாக நாடகம் இயற்றி, இயக்கி , நடித்து வரும் பாம்பே ஞானம் அவர்கள், ஸ்ரீ மகா பெரியவாளின் வாழ்க்கை வரலாற்றை இணைய வழியில் நீண்ட தொடரை உருவாக்கியுள்ளார். அதனை நாம் வரும் வாரங்களில் பார்ப்போம்.
இந்த வாரம் பதினேழாம் பாகம். சென்ற வாரத்தின் தொடர்ச்சி .
ஸ்ரீ மகா பெரியவாளின் அனுகிரக பாஷாணம் இந்த வாரமும் தொடர்கிறது. ஹிந்து மதத்தின் பெருமைகளை பள்ளி பாடத்திட்டத்தில் பெரிதும் புகுத்தப்படாததால் அவர்களுக்கு அதுகுறித்த ஞானத்தை நாம் சிறுவயது முதலே அளிக்க வேண்டும் என்கிறார். அது போலவே நாம் என்றும் வேதத்தை வளர்ப்பதில் நாட்டம் கொள்ளவேண்டும்.ஏதாவது ஒரு வகையில் வேடம் செழிக்க நமது பங்களிப்பை தரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார் இந்த வர காணொளியில்.

Leave a comment
Upload