
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
நடமாடும் தெய்வம் - பாகம் - 19
நாடக உலகில் மகளிரை மட்டும் வைத்து கடந்த 30 வருடங்களாக நாடகம் இயற்றி, இயக்கி , நடித்து வரும் பாம்பே ஞானம் அவர்கள், ஸ்ரீ மகா பெரியவாளின் வாழ்க்கை வரலாற்றை இணைய வழியில் நீண்ட தொடரை உருவாக்கியுள்ளார். அதனை நாம் வரும் வாரங்களில் பார்ப்போம்.
இந்த வாரம் பத்தொம்பதாம் பாகம். சென்ற வாரத்தின் தொடர்ச்சி.
ஸ்ரீமான் அண்ணாதுரை ஐயங்காரின் கதை தொடர்கிறது. ஸ்ரீ மஹாபெரியவளின் பக்தியால் ஈர்க்கப்பட்டு பிடிப்பு இல்லாதவர் எப்படி பித்து பிடித்து சிஷ்யராய் மாரி ஸ்ரீ வேத ரக்ஷனா நிதி டிரஸ்ட் துவங்கிய காரணம் தான் இந்தவார சுவாரசியம். வேதத்தை பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றிய சில தகவல்களையும் அனுகிரக பாஷையாக அருள்கிறார் பெரியவா.

Leave a comment
Upload