தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 99 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

2026913104000485.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

நடமாடும் தெய்வம் - பாகம் - 26

நாடக உலகில் மகளிரை மட்டும் வைத்து கடந்த 30 வருடங்களாக நாடகம் இயற்றி, இயக்கி , நடித்து வரும் பாம்பே ஞானம் அவர்கள், ஸ்ரீ மகா பெரியவாளின் வாழ்க்கை வரலாற்றை இணைய வழியில் நீண்ட தொடரை உருவாக்கியுள்ளார். அதனை நாம் வரும் வாரங்களில் பார்ப்போம்.

இந்த வாரம் இருபத்தி ஆறாவது பாகம். சென்ற வாரத்தின் தொடர்ச்சி .

சென்ற வாரத்தின் தொடர்ச்சி. ஸ்ரீ மகா பெரியவா திடீரென 11 முறை ஸ்னானம் எதற்காக என்ற கேள்விக்கு பதில் இந்த வாரம் கிடைக்கிறது. ஸ்ரீ மடத்தின் வாசலில் நடக்கும் கடவுள் மறுப்பு கூட்டத்தினருக்கு நீர் மோர் தயார் செய்து வைக்க சொல்கிறார். கடவுள் இருப்பதனால் தானே மறுக்கின்றனர், எதிர்க்கின்றனர் என்ற பெரியவாளின் அறிவுரை சிலிர்க்க வைக்கிறது.

ஆதர்ஷன தம்பதி தனது மகனை தீவிரவாதிகள் கடத்திக்கொண்டு சென்றுவிட்டனர் என்று கதறலுடன் வருகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார் ஸ்ரீ புது பெரியவாளும், ஸ்ரீ பால பெரியவாளும்.