தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 101 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

2026928135215624.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

நடமாடும் தெய்வம் - பாகம் - 28

நாடக உலகில் மகளிரை மட்டும் வைத்து கடந்த 30 வருடங்களாக நாடகம் இயற்றி, இயக்கி , நடித்து வரும் பாம்பே ஞானம் அவர்கள், ஸ்ரீ மகா பெரியவாளின் வாழ்க்கை வரலாற்றை இணைய வழியில் நீண்ட தொடரை உருவாக்கியுள்ளார். அதனை நாம் வரும் வாரங்களில் பார்ப்போம்.

இந்த வாரம் இருபத்தி எட்டாவது பாகம். சென்ற வாரத்தின் தொடர்ச்சி .

சென்ற வாரத்தின் தொடர்ச்சி மற்றும் இத்தொடரின் இறுதி பாகம். ஸ்ரீ மகா பெரியவாளின் அனுகிரஹத்தால் கடத்தி செல்லப்பட்ட மாணவன் காப்பாற்றப்பட்டு ஸ்ரீ மகா பெரியவாளை சந்தித்து நடந்தவற்றை நெகிழ்ச்சியுடன் விளக்குகிறார். ஸ்ரீ மகா பெரியவா கனகாபிஷேக வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. அத்துடன் இந்த தொடர் நிறைவு பெறுகிறது.

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.