
என் தினசரி நடைப் பயிற்சியின் போது நான் சந்திக்கும் பெண்மணி . யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டார். இரண்டு டப்பாவில் அவர் சமைத்த உணவினை கொண்டு வருவார். அங்கு பூங்காவின் அருகில் உள்ள கோவில் வாசலில் பூ விற்பவருக்கோ, தெரு சுத்தம் செய்யும் பணியாளருக்கோ, யாருக்கு அன்று அதிர்ஷ்டமோ அவருக்கு ஒரு டப்பா உணவினை கொடுப்பார். அவர்கள் சாப்பிடும்வரை அருகில் இருந்து பார்த்து விட்டு. டப்பாவை வாங்கிக்கொண்டு நேராக பார்க்கிற்கு வருவார். எங்கோ பார்த்துக்கொண்டே தன்னுடைய டப்பாவைத் திறந்து சாப்பிட ஆரம்பிப்பார். முடித்த பின் இரண்டு டப்பாவையும் கழுவி தன கைப்பையில் வைத்து கொண்டு கிளம்பி விடுவார். நான் பேச்சு கொடுக்க முயற்சி செய்தும் பேசவில்லை. இன்னொருத்தருக்கு கொடுத்து சாப்பிடும் அந்த நல்ல உள்ளத்தின் மௌனவிரதத்தை கலைக்க விரும்பவில்லை. அவருக்குத் தெரியாமல் நான் எடுத்த புகைப்படம் இது.


Leave a comment
Upload