ஆன்மீகம்
பிரபஞ்சமெங்கும் பெரியவா - 31 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20190811233056556.jpg



சர்வஞன், ஸர்வவ்யாபி காஞ்சி மகா பெரியவா இன்று உலகம் முழுவதும் உள்ள அணைத்து நாட்டினருக்கும், மதத்தினருக்கும் சொந்தமாக இருக்கிறார். அவரை சென்று வணங்கியவருக்கு மட்டும் அவர் கடவுள் இல்லை. அவரை பற்றிக் கேள்விப்படாத, தெரிந்திருக்காத, பரிச்சயமில்லாதவருக்கும் கடவுள் தான். ஆம் துன்பத்தில் இருக்கும் யாரையும் அழைத்து ஆசிவழங்கி, அரவணைத்துக்கொள்ளும் தெய்வம் காஞ்சி மகா பெரியவா.

மனிதருள் மாணிக்கமாய், தெய்வத்துக்கெல்லம் தெய்வமாய், ஈஸ்வரனாய், விஷ்ணுவாய், அம்பாளாய் சர்வ கோலத்திலும் வியாபித்திருக்கும் தெய்வம். அவரைப் பற்றி மிக அதிக சுவாரஸ்யமாய் ஒரு காணொளி.

2019081123312420.jpeg

ஸ்ரீ ஜம்புநாத கனபாடிகள்...

ஸ்ரீ ஜம்புநாத கனபாடிகள் தற்போது ஆச்சாரியனாக பாடசாலையில் வேதம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார். பால்ய பருவம் முதல், தான் மகா பெரியவாளை தரிசனம் செய்ததிலிருந்து தனதான அனுபங்களை அவர் விவரிக்கும் முறை நம்மை நெகிழச் செய்யும். ஆனந்தமும், அழுகையும், சிரிப்பும், பூரிப்பும், பெருமிதமும் கலந்து அவர் சிரிக்கும் விதம் நம் கண்களில் நீரைக் கொண்டுவரும். எத்தனையோ பேர் எவ்வளவோ அனுபங்களை பகிர்ந்து கொண்டாலும், இவர் விவரிக்கும் விதம் ஆச்சரிய நிமிடங்கள். நாமும் இவரோடு பாடசாலையில் படித்த அனுபவத்தை நமக்கு கொடுக்கிறது.. கண்டு மகிழ்வோம்!