பொது
ஒரே நாளில் இரு சோக நிகழ்வுகள்!

20190814032917354.png

பிள்ளையார் சதுர்த்தி, மொகரம் என பண்டிகைகள் முடிந்து சென்னை மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நேரம்... திடீரென்று செபடம்பர் 12ந்தேதியன்று அவர்களை தாக்கின, இரு சோக நிகழ்வுகள்!

20190814033117944.png

இரண்டும் பெண்கள் சம்பந்தப்பட்டது. முதலாவது மேல்தட்டு வர்க்க தொழிலத்பர் ஆன ரீட்டா லங்கலிங்கத்தின் தற்கொலை. இவர் மிகப்பெரிய கார் விற்பனை நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். 49 வயதான இவர் நுங்கம்பாக்கத்தில் தனது வீட்டின் படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவருடன் தனிப்பட்ட சொந்த வாழ்க்கை பிரச்சனையா அல்லது தொழிலில் ஏற்பட்ட சரிவா? இதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாய் தெரியவில்லை. இந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் பள்ளிக்கரணையில் ஒரு விபத்தால் நடந்தது அநியாய மரணம்! சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளம்பெண் சுபஸ்ரீயின் மீது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் திடீரென விழ.. தடுமாறி கீழே விழுந்தவர் மேலே பின்னால் வந்த தண்ணீர் லாரி மோத... அந்த இடத்திலேயே சுபஶ்ரீ அகால மரணமடைந்தார்.


இரண்டு பெண்கள் மரணம்... இரண்டும் வெவ்வேறு காரணம்! ஆனாலும் சென்னைவாசிகளிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ஆறுதலான விஷயம் சுபஸ்ரீ மரணம் பற்றி உடனே நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தானே முன்வந்து உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. அதனாலேயே காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க களத்தில் இறங்கியிருக்கிறது. அரசியல்வாதிகளின், ஆதிக்க சக்திகளின் பேனர்கள், கட் அவுட்டுகள் நகரம் முழுவதிலும் விரைவாக அகற்ற நடவடிக்கைகள் ஜரூராக எடுக்கப்பட்டு வருகிறது என்பதே நமக்கான தற்போதைய ஆறுதல்!