
சிறப்புமிகு சீமந்தம் - வளைகாப்பு!! - ஆரூர் சுந்தரசேகர்
Comment : எனக்கு 11.09.2019 அன்றுதான் வளைகாப்பு மற்றும் சீமந்தம் நடைபெற்றது. எனது நண்பர்கள் வாயிலாக விகடகவியில் வளைகாப்பு, சீமந்தம் பற்றிய கட்டுரை வந்திருக்கிறது என்பது தெரிந்து கொண்டேன். அதைப் படித்த பிறகு உண்மையாகவே எனக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது. வளைகாப்பு பற்றிய தகவல்கள் மிகவும் என்னை கவர்ந்த விஷயம் 1. வேப்பிலை காப்பு, கண்ணாடி வளையல்கள் அணிவிப்பதின் நோக்கம். 2.பிரசவ பயம் நீங்கி மிகவும் சந்தோஷமும், மனோதைர்யமும், ஏற்படுவது. விகடகவிக்கு நன்றி !!
புவனா சாய்கணேஷ் சைதாப்பேட்டை. சென்னை.
சிறப்புமிகு சீமந்தம் - வளைகாப்பு!! - ஆரூர் சுந்தரசேகர்
Comment : திரு.ஆரூர் சுந்தரசேகரின் சிறப்புமிகு சீமந்தம்-வளைகாப்பு ஒரு நல்ல கட்டுரை, அதைவிட ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் உரிய போட்டோக்களை போட்டு அசத்தி விட்டீர்கள். விகடகவிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து இதைப் போன்று பல கட்டுரைகளை கொடுத்து இன்றைய தலைமுறையினருக்கு நமது முந்தைய தலைமுறையினர் கடைபிடித்து வந்தது எல்லாம் அறிவியல் உண்மை என்பதை புரிய வைக்கவேண்டும்.
Viji JS.Bangalore.
அசத்தல் வாட்டர் ஏ.டிஎம்கள்! - ஸ்வேதா அப்புதாஸ்
Comment : என்னது... நீலகிரி மாவட்டத்தின் 68 இடங்களில் குடிநீர் ஏடிஎம் மெஷின்களா? வாவ்... சூப்பர்! இவற்றை நமது சொத்தாக பாவித்து பாதுகாக்க மக்களும் சுற்றுலா பயணிகளும் முன்வர வேண்டும். கலெக்டரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
நந்தினி ராகவன், மேற்கு மாம்பலம்
தேவன் 105! அது ஒரு தேவ மருத்துவம்!- வேங்கடகிருஷ்ணன்
Comment : பழம்பெரும் எழுத்தாளர் தேவனின் கதைகளை நான் சிறுவயதில் படித்தபோது பசியே எடுக்காத அளவுக்கு தேவாமிர்தமாக இருந்தது. அவரது புத்தகங்களை என்றும் போற்றி நூலகங்களில் படித்து வருகிறேன்.
ராஜாமணி, திருவான்மியூர்
ஆச்சர்யப்படுத்தும் அனிதா குஹா! சந்திப்பு - வேங்கடகிருஷ்ணன் படங்கள் - அனிருத்
Comment : அனிதா குஹாவின் பரதாஞ்சலி 30 ஆண்டு கால நாட்டிய சேவை பாராட்டுக்குரியது. தரமான நாட்டிய நாடகங்களை உலகம் என்றுமே போற்றி வளர்க்கும். சிறந்த குருவை கொண்ட மாணாக்கர்களின் திறமையும் பரிணமிக்கும்.
தீட்சிதா, மயிலை
வெற்றிகரமான 2500 சிறுநீரக மாற்று ஆபரேஷன்கள்… - மருத்துவ மேதையுடன் ஒரு சந்திப்பு - நமது நிருபர்
Comment : சிறுநீரக அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த 2 மருத்துவர்களுக்கும் பாராட்டுக்கள். அப்படியே, சிறுநீரக கோளாறினால் அவதிப்படும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சலுகை கட்டணத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் முன்வரலாமே!
சஜிவன் பிரகாஷ், மதுரை
வெற்றிகரமான 2500 சிறுநீரக மாற்று ஆபரேஷன்கள்… - மருத்துவ மேதையுடன் ஒரு சந்திப்பு - நமது நிருபர்
Comment : ? 2 மருத்துவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இணையும் வங்கிகள்...பெருகுமா நன்மைகள்?! - கே.பாலஸ்வாமிநாதன்
Comment : வங்கிகளின் இணைப்புகளில் இத்தனை பின்னணி மாற்றங்களா? இனியாவது வாராக்கடனில் மூழ்கிவிடாமல் இந்திய பொருளாதாரத்தை உயர்த்த உறுதுணையாக இருந்தால் சரி. எந்த வங்கி மாற்றங்களும் ஏழை மக்களுக்கு உதவாது என்பதே நிதர்சனம்.
மாயாவதி, பெங்களூர்
தவறாத குறி! சிறையில் பூட்டப்பட்டார் சிதம்பரம்...
Comment : நீதிமன்றங்களில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தாக்கல் விக்கிரமாதித்தன் வேதாளம் கதையாக மாறி வருகிறது. இதுபோன்ற வழக்குகளை சிபிஐ, பொருளாதார குற்றவியல் துறை விரைவில் விசாரித்து போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் பின்னால் வரும் அனைத்து நிதியமைச்சர்களுக்கும் இவ்வழக்கு பாடமாக அமையும்.
கிருபாகரன், புதுவை
முடிவுக்கு வருகிறதா போராட்டம்..? ஹாங்காங்- கள நிலவரம்! - ராம்.
Comment : பரபரப்பான சுற்றுலா நகரமாக திகழ்ந்த ஹாங்காங், தற்போது வார இறுதியில் பல்வேறு போராட்டங்களின் மையப் பகுதியாக மாறுவது வேதனைக்குரிய ஒன்று. விரைவில் அமைதி ஏற்பட பிரார்த்திப்போம்.
ராதா வெங்கட், ஆலப்பாக்கம்
சிறப்புமிகு சீமந்தம் - வளைகாப்பு!! - ஆரூர் சுந்தரசேகர்
Comment : சீமந்தம் உள்ளிட்ட பல்வேறு சாஸ்திர சம்பிரதாயங்களை வருங்கால சந்ததியினர் அறியும் சுந்தரசேகரின் கட்டுரை அமைந்துள்ளது. பாராட்டுகள்.
ரவிகிரண், கொல்கத்தா
தவறாத குறி! சிறையில் பூட்டப்பட்டார் சிதம்பரம்...
Comment : இத்தனை நடந்தும், திரு ப. சி 15 நாட்கள் சிறைக்குள் சென்றாலும், நம் நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை போய் விட்டது... தவறு செய்தவர்கள் தங்கள் பணபலம் மற்றும் அரசியல் செல்வாக்கு இவற்றைப் பயன்படுத்தி உத்தமர்களாக வீதி வலம் வருவார்கள்..
உலகம் சுற்றும் எடப்பாடி..! – ஆர்.ராஜேஷ் கன்னா
Comment : நாடகமே இந்த உலகம்... அதில் நாம் எல்லோரும் நடிகர்கள் தான்.. இதில் முதல்வர் எடப்பாடி என்ன விதிவிலக்கு...அவர் ஹிரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்... ஷோ முடிந்ததும் வேஷம் கலைய வேண்டியதுதான்...
வாவ் வாட்ஸப்
Comment : சென்ற வாட்ஸ் அப் படங்கள் அனைத்தும் சிறப்பு. அதுவும் கேரம் கிங் படம் தனியே மிளிர்ந்தது.
கௌஷிக், தீட்சிதா, மந்தைவெளி
உலகம் சுற்றும் எடப்பாடி..! – ஆர்.ராஜேஷ் கன்னா
Comment : தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம், கோட், சூட் உடை, தொழில் முதலீடு தொடர்பான கலந்துரையாடல் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக தொழில்துறையில் அதிகளவு அன்னிய. முதலீடு வந்தால் சரி.
ராதாகிருஷ்ணன், சேலம்

Leave a comment
Upload