தொடர்கள்
உணவு
குக் வித் தேவி ...  - ராம்.

தில் பசந்த்!

20200802231709388.png

இந்த வாரம் குக் வித் தேவியில் என்ன செய்யப் போகிறீர்கள் என்றதும் தேவியின் பதில் தில் பசந்த்.

மந்தைவெளியில் உள்ள பெங்களூர் ரம்யா பேக்கரியில் பல வருடங்களுக்கு முன் முதன் முதலில் கேட்ட பெயர் தில் பசந்த்.

அந்தக் காலத்தில் டிவி விடீயோ டெக் வீட்டுக்கு வீடு பிரபலமாகாத நேரம்.

ஒரு நாள் டிவியும் வீடியோ டெக்கும் வாடகைக்கு எடுத்து அன்று இரவு முழுவதும் படம் பார்க்க வேண்டும் என்று ப்ளான்.

ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் தான் அப்பாவிற்கு. இரவு படம் பார்க்கும் போது நான்கைந்து தில் பசந்த் வேண்டும் என்றார்.

வீட்டில் கண்டிஷன் நிறைவேறியது.

நான்கு தில் பசந்துகள் வந்து படம் போட தயாராகும் போது என்ஃபீல்ட் என்று ஒரு டிவி. குழாய் குழாயாக வைத்து பன்னிரெண்டு சானல்கள் டொக் டொக் கென்று திருப்ப வேண்டும்.

அலைஅலையாக, பூச்சி பூச்சியாக வந்ததே தவிர எவ்வளவு டியூன் பண்ணினாலும் படம் வரவேயில்லை.

கோபத்தில் தில்பசந்தும் சாப்பிடாமல் போய் தூங்கி விட்டார்.

ஒவ்வொரு முறை பெங்களூர் ரம்யா பேக்கரியை கடக்கும் போதும் இந்த தில் பசந்த் நினைவுக்கு வரும்.

இந்த வாரம் தேவியின் தில் பசந்த் பழைய நினைவுகளை இனிமையாக நினைவூட்டுகிறது.