எய்ட்ஸ் நோய் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மத்திய ஆப்பிரிக்காவில் தோன்றியிருக்க வாய்ப்பு என மரபணு ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
எய்ட்ஸ் நோய், எச்.ஐ.வி எனும் வைரஸ் பாஸிட்டிவால் விளைந்து மனிதனின் நோய் எதிர்பாற்றலை குறைக்கும் திறன் கொண்ட தொற்று நோய் ஆகும். 1981ம் ஆண்டு எய்ட்ஸ் நோய் முதன் முதலாக அமெரிக்கா நோய் கட்டுபாடு மற்றும் தடுப்பு மையங்களில் கண்டுபிடிக்கப்பட்டது.
உலகம் முழவதும் தற்போது 38 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோய் பாதிப்புக்குள்ளாகி வாழ்ந்து வருகின்றனர். இதில் பதினைந்து வயதிற்குட்பட்ட சிறார்கள் மட்டும் 1.8 மில்லியன் பேர். இதுவரை எய்ட்ஸ் நோய்க்கு 6.90 லட்சம் பேர் கடந்த 2019ம் ஆண்டில் இறந்து இருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவன புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
என்ன தான் எயிட்ஸ் நோய்க்கு மருந்தை உலக நாடுகள் பல்வேறு வடிவங்களில் கண்டுபிடித்தாலும், நோயாளிகள் எய்ட்ஸ் நோயுடன் போராடி பல்வேறு வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எய்ட்ஸ் நோய் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்க கிட்டதட்ட 40 வருடங்கள் விஞ்ஞானிகள் போராடியும், இதுவரை ஆராய்ச்சி மட்டுமே தொடர்கிறது.எய்ட்ஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முடியவில்லை.
எய்ட்ஸ் நோய் பரவுதல் தகாத உடலுறவு, இரத்த தானம், கிருமி பாதித்த ஊசிகளினால், தாயிடமிருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு பரவுதல், விந்து, யோனி திரவம், முன்விந்து திரவம், தாய்பால் போன்ற உடல் திரவங்கள் அல்லது ரத்த ஒட்டத்துடன் ஏற்படும் நேரடி தொடர்பினால் எச்.ஐ.வி வைரஸ் ஒருவரிடமிருந்து மறொருவருக்கு தொற்றாக பரவுகின்றது.
எய்டஸ் பரவாமல் இருக்க பாதுகாப்பான உடலுறவு மற்றும் புதிய ஊசிகளை பயன்படுத்தும் அவசியத்தினை மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கலிஃபோர்னியாவை சேர்ந்த 66 வயதான லோரீன் வில்லன்பெர்க் என்ற பெண்மணி கடந்த 1992ல் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். எய்ட்ஸ் நோயிடம் இருந்து மீண்ட மூன்றாவது நோயாளி என்றாலும் ஆரம்பம் முதல் எந்த மருந்தும், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையின்றி எய்ட்ஸ் நோயிடம் இருந்து மீண்ட முதல் பெண் என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
கடந்த 28 வருடங்களுக்கு முன்னர் எய்ட்ஸ் நோய் இருப்பதாக லோரீன் வில்லன்பெர்க்கின் ரத்த மாதிரியில் தெரிந்துள்ளது. எந்த மருத்துவமனைக்கும் செல்லாமல், தனது அன்றாட பணிகளை மட்டுமே லோரீன் வில்லன்பெர்க் செய்து வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு லோரீன் வில்லபெர்க் ரத்த மாதிரியை விஞ்ஞானிகள் பரிசோதனைக்கு எடுத்துச் சென்று ஆராய்ந்த போது, ரத்தத்தில் 1.5 பில்லியன் ரத்த அணுக்களில் எச்.ஐ.வி கிருமி தென்படவில்லை. குடல், மலக்குடல் மற்றும் குடலில் இருந்த மில்லியன் கணக்கான செல்களை பகுப்பாய்வு செய்த போதும் வைரஸ் அறிகுறிகள் எங்கும் காணப்படவில்லை என்பதனை அறிந்த விஞ்ஞானிகளுக்கு இது பெருத்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
எய்ட்ஸ் வைரஸ் மனித உடம்பில் நுழைந்து விட்டால் ரத்த செல்களில் உள்ள மரபணுவில் உள்ள டிஎன்ஏ-க்களில் ஒளிந்து இருந்து நாளடைவில் பல்கிப் பெருகிவிடும். அதன் பிறகு அந்த கிருமியை ரத்த செல்களில் இருந்து முற்றிலுமாக ஒழிப்பது என்பது இயலாத காரியம் என்றே இது நாள் வரை மருத்துவ உலகம் நம்பியிருந்தது.
தற்போது கடந்த 28 வருடங்களாக எந்த சிகிச்சையும் எடுக்காத எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட லோரீன் வில்லன்பெர்க் ரத்த அணுக்களில் எயிட்ஸ் வைரஸ் காணப்படவில்லை என்ற ஆராய்ச்சி முடிவினால் மருத்துவ நிபுணர்கள் குதுகாலம் அடைந்துள்ளனர்.
மனிதனின் நோயெதிர்ப்பு மண்டலம் வீறு கொண்டு செயல்படும் போது எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி. வைரஸ் தொடர்ந்து ரத்த அணுக்களில் உள்ள ஜீன்களில் பல்கிப் பெருக முடியாது என்பதற்கு லோரீன் வில்லன்பெர்க் தற்போது சான்றாகி விட்டார்.
இனி வரும் காலத்தில் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து இன்றி, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையின்றி, ஸ்டெம் செல் தெரபியின்றி மனிதனின் நோயெதிர்ப்பு மண்டலத்தினை மாத்திரம் ஊக்குவித்து சிறப்பாக செயல்பட வைத்தால், ரத்த செல்களில் எய்ட்ஸ் நோய் உருவாக்கும் வைரஸை முற்றிலும் செயல்படாமல் அழித்து விட முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
Leave a comment
Upload