தொடர்கள்
கவிதை
சுடச் சுட மழை...! - சி. கோவேந்த ராஜா

202091620414483.jpeg

மழை சுடுமா...?
சுடு மழையா....?
சுடச் சுட மழையா...?!

மழை என்றவுடன்...
மனதில் என்ன தோன்றுகிறது...?!

துளி மழையா...?!
மழைத்துளியா...?!
தூரல் மழையா...?!
மழைத் தூரலா...?!
சாரல் மழையா...?!
மழைச் சாரலா...?!

பெரு மழையா...?!
மழைப் பெரு வெள்ளமா....?!

மன நிலையை.... உணர்த்திடும் ....
மழை நிலை...!!
மழை நிலையை.... உணர்த்திடும்..
மன நிலை...!!

சுக மன நிலையில்...
சுகந்த மழை நிலை....!!

சோக மன நிலையில்...
சோர்ந்த மழை நிலை...!!

முழு மழையில்...
முழுக்க நனைந்தால்....
உடல் வெப்பம்.... தணியுமா...??
உடல் வெப்பம்....கூடுமா...??

ஓ... சுடச் சுட மழையா...??!!

மழை .... எப்படியும் இருக்கலாம்....!!
அன்பு மழை.... வ‌ம்பு மழை...
ஆனந்த மழை...காந்த மழை...
இனிய மழை.... இன்னல் மழை...
நினைவு மழை.... நிலையில்லா மழை...
எண்ண மழை... ஏக்க மழை...
தேன் மழை... தென்றல் மழை...
பூ மழை... புயல் மழை..

ஒரு மழை... பற்பல நிலை மழை...!
மன நிலையை.... உணர்த்திடும் ....
மழை நிலை...!!
மழை நிலையை....உணர்த்திடும்..
மன நிலை...!!