தொடர்கள்
பொது
"ஆட்சியர் பெயரில் போலி மெயில் ஐடி!" - ஸ்வேதா அப்புதாஸ்

கடந்த வாரம் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் சில முக்கிய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா பெயரில் ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது.. அதில் அமேசானில் சில கிஃப்ட் பொருள்களை ஆர்டர் செய்து ரிப்ளை அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை மாவட்ட ஆட்சியருக்கு ஒரு பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்...

2020910220825161.jpg
அந்த மெயில் ஐடியை பார்த்த ஆட்சியருக்கு இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்து, விசாரிக்க கூறியுள்ளார் மாவட்ட ஆட்சியர்.

உடனடியாக இந்த மோசடி குறித்து பத்திரிகையளர்களிடமும் விளக்கி மக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த ஆன்லைன் மோசடி குறித்து காவல்துறை அதிரடியாக விசாரணையில் இறங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் பெயரில் யார் இப்படி மோசடி செய்துள்ளார்கள் என்று பலகோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

2020910221829557.jpg மாவட்ட ஆட்சியர் பெயரில் மெயில் ஐடியை உருவாக்கின அந்த நபர் மாவட்ட நிர்வாகத்தில் பணிபுரிபவராகக் கூட இருக்கலாம்... அல்லது மாவட்ட ஆட்சியரின் திறமையான செயல்பாடுகளை திசை திருப்பி அவர் மீது களங்கம் ஏற்ப்படுத்தக் கூட இப்படி செய்திருக்கலாம் என்று பேசப்படுகிறது.

மாவட்ட கலெக்டர் பெயரில் போலி இ-மெயில் உருவாக்கியது யார் என்று போலீஸ் விசாரிக்க.... அந்த மெயில் அனுப்பப்பட்ட ஐ பி முகவரி, இன்டெர் நெட் ப்ரோடோகால் அட்ரஸ் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அனுப்பியதை போல் காட்டுகிறதாம். நைஜிரியா போன்ற நாடுகளில் இருந்து வந்ததாக காட்டுவதால், உண்மையான ஐபி முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதே போல குன்னூர் தேயிலை வாரிய இயக்குநர் பெயரில் போலி இ-மெயில் வந்து, இன்னொரு அதிர்வலையை நீலகிரி மாவட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது. அந்த போலி இ மெயில் Chiefececutive 191 @gmail.com என்ற பெயரில் வந்துள்ளது... இதனால் மாவட்டத்தின் மிக முக்கிய அதிகாரிகளை குறிவைத்து யாரோ செய்யும் இந்த மோசடி வேலையை விரைவில் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் என்று போலீஸ் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

நாம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகனை நேரில் சந்தித்து பேசினோம்... “ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதை எங்க சைபர் கிரைம் போலீஸ் புலன் விசாரணை செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட மோசடி செய்பவர்களை பிடித்து வழக்கு பதிவு செய்து கைதும் செய்திருக்கிறோம்... தற்போது மாவட்ட ஆட்சியர் பேரிலேயே ஒரு இமெயில் உருவாக்கி, மோசடி செய்வது இது தான் முதல் முறை. இது பெரும் தவறு. எங்க காவல் துறை டீம் மிக மும்முரமாக புலன் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்... விரைவில் அந்த மோசடி நபர் சிக்குவார் என்று எதிர்பார்க்கிறோம். பொது மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், தேவையற்ற இ மெயில் லிங்க் வந்தால் ஓபன் செய்யவேண்டாம்.

சில சமயம் வாட்ஸப் மூலம், கியூ ஆர் குறியீடு அனுப்பியும் மோசடி செய்கிறார்கள். அறிமுகம் இல்லாத இடங்களில் இருந்து வரும் மெயில் குறியீடுகளை ஸ்கேன் செய்வது, ஓபன் செய்வதை தவிர்க்கவும். ரிமோட் ஆக்சஸ் அப்ளிகேஷன் போன்றவற்றை பதிவிறக்கம் செய்யவோ தெரியாத நபர்களின் போன் கால்களை அட்டெண்ட் செய்வதையோ கூட தவிர்க்கவும்... ஏதாவது சந்தேகம் இருந்தால், உடனடியாக சைபர் கிரைம் போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டியது அவசியம்” என்று உஷார் படுத்துகிறார் காவல் கண்காணிப்பாளர் சசி மோகன்.