தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

2020916190609762.jpeg


உலகம் சுற்றும் விகடகவி ! ராம்.

லேட்டானாலும் லேட்டஸ்ட் செய்திகளை உலகம் சுற்றும் விகடகவியில் அள்ளித் தந்திருக்கிறார் ராம். மணமணக்க, சூடுபறக்க, படிக்க சுவையாக இருந்தது.

கலாவதி சண்முகம், பட்டினப்பாக்கம்


வாசி யோசி.. - 8 - வேங்கடகிருஷ்ணன்

மன்னிப்பு குறித்த புத்தக விமர்சனத்தில், நாம் மன்னிப்பு கேட்க தயங்கக்கூடாது. அதன் சாதக, பாதகங்களை ஆராயக்கூடாது என்கிறீர்கள். சரி! என்னைவிட வயதில் குறைந்த சகோதரி, 'மோசடி பேர்வழி, தில்லுமுல்லு' என எந்த தப்பும் செய்யாத என்மீது அவதூறு கூறுகிறார். இதற்காக நான் மட்டுமே வருந்துகிறேன். என்ன செய்ய?

ஜி


வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை... 8 - டாக்டர் எம்.ஏ. வேங்கடக்ருஷ்ணன்

சென்ற வார வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை தொடரால், கண்ணபிரானின் பையவே நிலையை மிக அழகாக வர்ணித்திருக்கிறார் வேங்கடகிருஷ்ணன். மிக சிறப்பு.

அனந்தராமகிருஷ்ணன், ஶ்ரீரங்கம்


உலகம் சுற்றும் விகடகவி ! ராம்.

அருமையான பதிவு. அறிவியலை சுலபமாக புரியும்படி எளிமையாக்கியது சுஜாதா அவர்களை நினைவூட்டியது. உலகச் செய்திகளும் சிக். மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்!

ராஜேஷ், ஹாங்காங்


அஷ்டதிக் பாலகர்களின் வழிபாட்டு பலன்கள்!! - ஆரூர் சுந்தரசேகர்.

அஷ்டதிக் பாலகர்களின் மகிமைகளை படித்து தெரிந்து கொண்டோம். மிக பயனுள்தாக இருந்தது. அடுத்து, நவராத்திரி கொலுவின் மகத்துவம் பற்றிதானே எழுதப் போகிறீர்கள் சுந்தரசேகர்?!

மாயா குப்புசாமி, வடபழனி


ஹத்ராஸ் சம்பவம்.. ஒரு ஃபாலோ அப்... - தில்லைக்கரசி சம்பத்

ஹத்ராஸ் சம்பவம் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் மர்ம நாவலை படிப்பதை போல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான நிரந்தர தீர்வு காண்பதற்குள் இன்னும் எத்தனை இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவார்களோ?!

செண்பகராமன், திருவாரூர்


டிரம்பிற்கு எலி வைத்தியம்! – ஆர்.ராஜேஷ் கன்னா.

அதிபர் டிரம்ப்புக்கு எலி வைத்தியம் பத்தாது. இன்னும் அதுக்கு மேல... தேர்தல் பிரசாரத்துல பெண்களை கிஸ் அடிப்பேன், அது இதுனு என்னமா லொள்ளு பண்றாரு!

சார்லஸ் பிரதாப், நாகர்கோவில்


நீளும் நிர்பயா மரணங்கள் - கே.ராஜலட்சுமி

நீளும் நிர்பயா மரணங்கள் குறித்து ராஜலட்சுமியின் தத்ரூப வார்த்தைகளில் உருவான கவிதை, அனைவரிடமும் ரத்தக் கண்ணீரை வரவழைத்தது. இதற்கான நிரந்தர தீர்வு மத்திய-மாநில அரசுகள் கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளில் தான் உள்ளது.

செந்தில் குமார், அண்ணாநகர்


யானை மீதிருந்து விழுந்த பாபா ராம்தேவ்... - செளம்யா

இதென்னடா பாபா ராம்தேவுக்கு வந்த சோதனை! அவர் பல்வேறு யோகாசனங்கள் செய்வதை இந்தியாவே வாய்பிளந்து பார்க்கும். ஆனா, ஐந்தறிவு உள்ள யானை கீழே தள்ளிடுச்சே! ஏற்கெனவே கொரோனா தடுப்பு மருந்துனு பதஞ்சலி மருந்தை விளம்பரப்படுத்தி இடியாப்ப சிக்கல்ல இருக்காரு. இப்ப, இது வேறயா?

கவிக்குமார், ஆவடி


இது ஒரு கொலு காலம் ! போட்டிக்கு நீங்க ரெடியா ???

ஐ... நல்ல முயற்சி! கொரோனா வந்துடுச்சே, நம்ம வீட்டு கொலுவை பார்க்க யார் வரப்போறாங்கனு தவிச்சேன். இப்ப எங்க வீட்டு கொலுவை உலகம் முழுக்க பார்ப்பாங்க. நாங்க படங்களை அனுப்ப ரெடி ஆயிட்டோம். பரிசு கொடுக்க, நீங்க ரெடியா?

காயத்ரி ரகுநாதன், திருமழிசை


அஷ்டதிக் பாலகர்களின் வழிபாட்டு பலன்கள்!! - ஆரூர் சுந்தரசேகர்.

அஷ்டதிக் பாலகர்கள் மற்றும் வாஸ்து பற்றி அனைவரும் அறிந்துகொள்ளும்படி அதற்குரிய காயத்திரிகளுடன் தெளிவாகவும் அருமையாகவும் கொடுத்துள்ள ஆரூர் சுந்தரசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், விகடகவிக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்னேஷ், பெங்களூர்


பாஜ தலைவர் உருவில் ₹100 நாணயம்... - நர்மதா வெங்கட்

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை போல், மத்திய பாஜ ஆட்சியில் அதன் மூலக்கருவான ஜனசங்கத்தை உருவாக்கிய முன்னோடிகளுக்கு செய்யப்படும் சிறப்பு நல்ல விஷயமே!

வினோத் பாபு, சாலிகிராமம்


மாண்புமிகு மனிதர்கள்...!. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

மாண்புமிகு மனிதர்களில் தனது குடும்பத்தில் நடைபெறும், ஏற்கெனவே சிறுவயதில் நடைபெற்ற நவராத்திரி கொலு உள்பட பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஜாசன் நகைச்சுவையுடன் அழகாக குறிப்பிடுகிறார். அஷ்டாவதானியான அவரையும் கொலுவில் உட்கார வைத்துவிடப் போகின்றனர். அலர்ட்டா இருங்க!

சீதாலட்சுமி விஜயராகவன், குரோம்பேட்டை


த(கொ)லைநகரம் சென்னை! - ஆர் .ராஜேஷ் கன்னா.

என்ன பண்றது.... கூடா நட்பும் முறையற்ற உறவும் தறிகெட்டுப் போன இளைய சமுதாயமும் அதிகரித்துவிட்டதால், சென்னை த(கொ)லைநகரமாக மாறிவிட்டது. தட்டிக் கேட்க வேண்டியவரே தவறு செய்கிறாரே... யாரை சொல்லி, என்ன பயன்?

திலகவதி பொன்னன், சோழவரம்


"அரேபியன் பிரியாணி...” - ஸ்வேதா அப்புதாஸ்

குழி மந்தி பிரியாணி படங்களை பார்க்கும்போதே ஜொள்ளு நிக்கலை. செஞ்சு சாப்பிட பொறுமையில்லை. கேரளாவில் இருந்து சென்னைக்கு ஒரு ஸ்பீட் கூரியர்ல பார்சல் பண்ணி அனுப்புங்க ஆன்மேரி. எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல!

பிச்சுமணி, தங்கசாலை, சென்னை


பக்குவம்... - பா.அய்யாசாமி

பக்குவம் என்ற பெயரில் மிகச்சிறந்த கதையை வழங்கி அசத்திவிட்டார் அய்யாசாமி. அதென்ன... சென்ற வார விகடகவி கதை, கட்டுரை படங்களில் உணவு அயிட்டங்களா இருக்கு. ஒருவேளை, உணவு திருவிழாவோ?!

சிவகார்த்திகேயன், வாழவந்தான்


"கொடநாடு கொலை வழக்கு எங்கே சென்று கொண்டிருக்கிறது..?" - ஸ்வேதா அப்புதாஸ்

ஜெயலலிதாவின் வாழ்க்கையே மர்ம முடிச்சுகள் நிறைந்தது என பலர் கூறுவர். இப்போது அவர் கூட்டாக வாங்கிய கொடநாடு எஸ்டேட் பங்களாவும் கொலை, கொள்ளைகளுடன் மர்ம குகையாகிவிட்டது. சிந்துபாத் கதைபோல் இந்த சஸ்பென்ஸ் தொடரும் போலிருக்கு!

சகுந்தலா பாலகிருஷ்ணன், பொன்னமராவதி


மெட்ரோ ரயில் வடிவில் அரசு பள்ளி... - மாலாஸ்ரீ

பரவாயில்லையே... எங்க ஏரியாவில் மெட்ரோ ரயில் வடிவில் மாநகராட்சி பள்ளியா? கேட்கவே ஆச்சரியமா இருக்கு. நல்ல முயற்சிக்கு பலன் கிடைக்கும்.

கஸ்தூரி ஏழுமலை, திருவொற்றியூர்


எப்படியாச்சும் ரேஷன் குடு - நமது நிருபர்

ரேஷன் கடைகளில் எதுக்கு கைரேகை கொண்டு வருவானேன்... பிறகு வேண்டாம்னு சொல்வானேன்? கடைக்காரங்களை கேட்டா, 'எங்களுக்கு ஆர்டர் வரலை, கை வைங்க'னு சொல்றாங்க. இது, 'அடிக்கறா மாதிரி அடிக்கிறேன், நீ அழற மாதிரி அழு'ங்கற மாதிரி இருக்கு!

ராஜசேகரன், பம்மல்


பணிந்தாரா பன்னீர்?!.... ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் நடந்த உட்கட்சி மோதல்களை கிரைம் த்ரில்லர் படம் போல் பரபரப்பாக்கி விட்டீர். இபிஎஸ்-ஓபிஎஸ் இருவருக்குமே தலைக்கு மேல் எப்போதும் பாஜ எனும் கத்தி தொங்கி கொண்டிருக்கிறது என்பதே நிஜம்!

சுபத்ரா ரூபன், திருத்தணி


சீன தூதரகத்தின் முன் தைவான் போஸ்டர்... - சங்கர்

என்னமோ அவங்க நாட்டுல போஸ்டர் ஒட்டின மாதிரி சீனா சிலிர்த்துக்குதே... அவங்களுக்கு பிடிக்காதவர்களை மத்தவங்களும் ஏத்துக்கக்கூடாதாம்! இது எந்த ஊர் நியாயம்? நாங்கெல்லாம் ரைட்ல இன்டிகேட்டர் போடாம திரும்பி, எதிராளிகளை 'மெர்சல்' ஆக்கிடுவோம்ல...

அலெக்சாண்டர், திருப்பத்தூர்


வாவ் வாட்ஸ்ப்

சென்ற வார வாட்ஸ் அப் படங்கள் செம கலக்கல். அதிலும் டைகர் கேட்ச், சர்க்கஸ் சகோ, எல்லாமே என் சாய்ஸ், குண்டம்மா சாதனை ஆவலை அதிகரித்தன.

தீட்சிதா, அட்சயா, அனுஷ்கா, கோவை


கட்டாத வீட்டுக்கு மத்திய அரசு வாழ்த்து... - கோமதிநாயகம்

கட்டாத வீட்டுக்கு மத்திய அரசு வாழ்த்து கடிதமா? அந்தளவுக்கு மத்திய-மாநில அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கு உள்ளது. அரசு திட்ட பணிகள் எக்கேடு கெட்டாலும், அவர்களுக்கு டாண்னு 1-ம் தேதி சம்பளம் வருது. ஏன்னா, இது ஜனநாயக நாடு!

பிரமிட் சந்தானம், கூடுவாஞ்சேரி


வலைக்கள்ளன்

வேலை செய்யற கிளிகளுக்கு ஆயிரம், ரெண்டாயிரம்... எதுவுமே செய்யாத கிளிக்கு ஐயாயிரமா? நல்லாயிருக்கே நியாயம்? அசைவ ஜோக்னு ஆரம்பிச்சு, ஒரு பெண்ணை என இழுத்து, கடைசியில் இது புரட்டாசி என ஏமாத்திட்டீங்களே... வலைகள்ளனின் குசும்பு அதிகமாயிடுச்சு!

கௌஷிக், சூர்யா, ராகுல், சென்னை


உலா வரும் பிரமாண்ட யானை...! - விமலா பரந்தாமன்

யப்பா... யானையின் பிரமாண்ட உருவம் பிரமிக்க வைக்கிறது. 'யானை பொம்மையாக இருந்தாலும் ஆயிரம் பொன்' என புது பழமொழி உருவாகிடுச்சு போல!

ரோஹிணி சிவா, பெங்களூர்


வந்தார்கள்... வென்றார்கள்... - 8 - மதன்

அந்த காலத்தில் ஒருசில சுல்தான்கள் மது, மாதுக்களுடன் உல்லாசமாக இருந்தனர். இதனால் அவர்கள் போர்களின்போது எதிரிகளிடம் சிக்கி கொலையுண்டோ, அடிமைகளாக செத்துப் போனதையோ அழகாக விவரித்தீர்கள். வந்தார்கள் வென்றார்கள் தொடர் விறுவிறுப்பாக உள்ளது.

ராஜேந்திரன், பொள்ளாச்சி


உள்ளதைச் சொல்வேன்! - 8 - அண்ணாதுரை கண்ணதாசன்

தங்களது கதை விவாதத்தில் 'அல்வா' கொடுத்த லாக் பிரேக்கரை பற்றி விவரமாக கூறினீர்கள். பிறகு 'நான் ஒரு லாக் பிரேக்கர். என்னை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்' என கூறினால் எப்படி? லந்தா?!

பாக்கியலட்சுமி, மாதவரம்


உலகை குலுக்கிய வழக்குகள்! – ஆர் .ராஜேஷ் கன்னா

உலகை குலுக்கிய வழக்குகளில் சென்ற வாரம் வெளியான சம்பவம் மனதை குலுங்க வைத்தது. ஜான் லெனானின் வளர்ச்சி, தி பீட்டில்ஸ் இசைக்குழுவின் பிரபலம், காதல் மனைவியுடன் ஜான் லெனானின் நிர்வாண புகைப்படம், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவரின் தற்போதைய பரிதாப நிலை வேதனையாக இருந்தது.

பார்த்திபன், வளசரவாக்கம்


பெண் தலைவருக்கு அவமரியாதை... - சவுந்தரி பிரபாகர்

தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஊராட்சி தலைவருக்கு நேர்ந்த அவமரியாதையை படிக்கும்போது நெஞ்சு கனத்தது. இனியும் இதுபோன்ற அவலநிலை பிற மாவட்டங்களிலும் தொடராதிருக்க மாநில அரசு சட்டம் இயற்றுமா?

யமுனா பிரபாகரன், அயனம்பாக்கம்


ராக தேவதைகள்... - 8 - மாயவரத்தான் சந்திரசேகரன்

இந்தோள ராகத்தின் சிறப்பு, அதை ஒவ்வொரு இசையமைப்பாளரும் கையாண்ட விதம் என சொல்லி அசத்திவிட்டீர் மாயவரத்தான். கடைசியில், 2 திராவிட கட்சிகளுக்கு மக்கள் ஓட்டு போடுவதை போல், பழைய 2 பாடல்களை மக்கள் திரும்ப திரும்ப கேட்கின்றனர் என குட்டு வைத்துவிட்டீர்!

மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை


திமுக முதல்வர் வேட்பாளர் துர்கா ஸ்டாலின்?! - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

யாருமே எதிர்பாராத நிலையில் 'துர்கா ஸ்டாலின் அடுத்த முதல்வர்?' என தலைப்பில், அவரை பற்றி முழு அனலைசிங் கட்டுரை வெளிட்டு ஜாசன் அசத்திவிட்டார்! திமுகவுக்கு எதிரான பாஜவின் இந்து எதிர்ப்பு பிரசாரத்தை முறியடிக்க, சபரீசனின் அரசியல் மூவ் வெற்றி பெறட்டும். செம கலக்கல்!

ராதா வெங்கட், ஆலப்பாக்கம்


வலையங்கம்

மத்திய அரசிடம் மாநில உரிமைகளை தற்போதைய 'அம்மா'வின் அரசு அடகு வைத்துவிட்டது என்பதே உறுதி. இதை ஜெயலலிதாவின் ஆன்மா நிச்சயம் மன்னிக்காது. சூப்பர் வலையங்கம்!

செல்வராஜ், சேலம்


அஷ்டதிக் பாலகர்களின் வழிபாட்டு பலன்கள்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Our profound thanks to Aroor Sundarasekar for his Ashtadhic balagargal article which is a combined intellectual clarity of all eight dhicbalagars and also defines his passion towards writing.

எஸ். சாய்லக்ஷ்மி


உலா வரும் பிரமாண்ட யானை...! - விமலா பரந்தாமன்

நல்ல ஒரு வியாபார நோக்கில் (good business model) ஓர் முயற்சி!

எஸ். பார்கவன், அமெரிக்கா


மெட்ரோ ரயில் வடிவில் அரசு பள்ளி... - மாலாஸ்ரீ

இதை வடிவமைப்பு செய்தவர்களுக்கு பாராட்டுக்கள்!

எஸ். பார்கவன், அமெரிக்கா


பணிந்தாரா பன்னீர்?!.... ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

தேர்தல் முடிவுகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முடிவு, இவையெல்லாம்....தீர்மானம் செய்வது தான் நடக்கும்!

எஸ். பார்கவன், அமெரிக்கா


திமுக முதல்வர் வேட்பாளர் துர்கா ஸ்டாலின்?! - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

அது சரி, இது பெரியார் மண் என்று எதை வைத்து நம்பிக்கை.? பெரியாரின் கொள்கைகளை இங்கே தமிழ் நாட்டில் உண்மையில் எவ்வளவு பேர் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள் என்று எப்போதாவது, எந்த வகையிலாவது அனுமானிக்கப்பட்டதா?

எஸ். பார்கவன், அமெரிக்கா


வலைக்கள்ளன்

சுட்டது தான் சுட்டீர்கள்.....ஏன் பழைய விஷயங்களையே சுட்டார்கள்

எஸ். பார்கவன், அமெரிக்கா


வாசகர் மெயில்

தங்கள் வலையங்கத்தில் இந்த வார அலசல் ஒரு புதிய திருப்பத்தை உண்டாக்குமா?என்ற புதிய கோணத்தில எழுதப்பட்டுள்ளது.

மரு. வெங்கட்ராமன, கோபி


காலமே போதி மரம் - 14 - என்.குமார்

Wow..Super anna..Anda Neraya Anbu..

ராஜி, ஆவடி


அஷ்டதிக் பாலகர்களின் வழிபாட்டு பலன்கள்!! - ஆரூர் சுந்தரசேகர்.

very useful consized article by Mr.Sundarasekar!Padmamuthuswamy.Vijayawada.

சுப்ரமணியன்


வலைக்கள்ளன்

இதைத்தான் கள்ளனோட குறும்புன்னு சொல்றது....

வெங்கடகிருஷ்னன்