
வருண பகவான் தீபாவளியன்றும் அதற்கு பிறகும் கருணைகாட்டி மழை பொழிவார் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நவம்பர் 13 தேதிக்கு பிறகு அடுத்தடுத்த காற்றழத்த சுழற்சியால் தமிழகத்திற்கும், கடலோர மாவட்டங்களுக்கும் நல்ல மழை பொழிவு கிடைக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் சொல்கிறார்கள்.
திமுக அன்பில் மகேஷ் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரது ஜாமீன் மனு தீபாவளிக்கு பின் விசாரிக்கப்படும் என்ற தகவல்.
தமிழக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தற்போது தீவிர அரசியலில் குதித்துள்ளார். விஜய் தேர்தல் வாக்குறுதி படி விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார்.
முரசு புயலின் போது தமிழ்நாட்டு மீனவர்கள் உயிரிழந்தவர்களுக்கு ரூ8 லட்சம் தொகை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

சென்னையில் ஜெகன் மோகன் ரெட்டி இல்ல திருமண விழாவில் தமிழக முதல்வர், விஜயின் தாயார் சோபனா மற்றும் நடிகை த்ரிஷா கலந்து கொண்டனர்.
இதில் த்ரிஷா ரோஸ் நிற புடவையில் பளிச்சென்று லேசாக சதைப்பிடிப்புடன் வந்தது தான் தற்போது ஹைலைட் .

விரைவில் த்ரிஷாவிற்கு பெரிய பதவி வரப்போகிறது என்று திருமண கூடத்தில் விவிஐபி பேச்சாக இருந்தது
.
தீபாவளிமளிகை பொருட்கள் , காய்கறிகள் கூட்டுறவு கடைகளில் சென்னையில் விநியோகிக்கப்படுகிறது

இதற்குள் ஆசிரியர் அழைப்பு தீபாவளி ஸ்பெஷல் இதழ் வேலை பாருய்யா சொன்னா த்ரிஷா கலந்துக்கொண்ட திருமண விழாவில் இருக்கே என்று ஒரு ஷொட்டு வைத்தார்.
அடுத்த 15 நிமிடங்களுக்குள் அலுவலகம் ஆஜர்.

Leave a comment
Upload