தொடர்கள்
விகடகவியார்
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் - விகடகவியார்

20261007062922653.jpeg

அமெரிக்க செனட் தற்போது ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

ட்ரம்பின் குடியரசுக் கட்சி மிகப்பெரிய பின்னடைவை இந்த தேர்தலில் சந்தித்திருக்கிறது.

அமெரிக்காவில் நவம்பர் 3-ஆம் தேதி இடைக்காலத் தேர்தல் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது.

பல்வேறு மாகாணங்களில் ஆளுநர் பதவிகளுக்கும் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ட்ரம்பின் குடியரசு கட்சியே பெரும்பான்மை பெற்றிருந்தது.

தேர்தல் முடிவுகளில் ஜனநாயக கட்சி முக்கிய வெற்றிகளை பெற்றிருக்கிறது.

குடியரசு கட்சி வசம் இருந்து 5 செனட் இடங்களை ஜனநாயக கட்சி கைப்பற்றி செனட் சபையில் பெரும்பான்மை பெற்றிருக்கிறது. பிரதிநிதிகள் சபையிலும் குடியரசுக் கட்சி இடமிருந்து ஏழு இடங்களை ஜனநாயக கட்சி கைப்பற்றியது.

விலைவாசி உயர்வு பொருளாதாரப் பிரச்சினைகள், ஈரான் போர் உள்ளிட்ட விவகாரங்கள் ட்ரம்பின் குடியரசு கட்சியின் பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

இனிமேல் அதிபர் ட்ரம்ப் கொண்டுவரும் சட்ட மசோதாக்கள் மற்றும் முக்கிய நியமனங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் தருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது .

ஈரான் போர், பண வீக்கம் ,வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகியவற்றால் வாக்காளர்கள் அதிருப்தி அடைந்ததே இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்கிறார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் .துணை அதிபரின் இந்த கருத்துக்கு பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தது.

ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழே குறைந்து, இரண்டு மாதங்களுக்கும் மேலான காலத்தில் இல்லாத அளவுக்கு சரிந்தது .

வெளிநாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை எதிர்த்து துணை அதிபர் தொடர்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டுதான் இருந்தார்.

ட்ரம்ப் யார் பற்றியும் கவலைப்படாமல் அவரது தடாலடி நடவடிக்கைகள் தொடர்ந்தன .

இப்போது கூட நான் போட்டியிட்டு இருந்தால் இந்த பின்னடைவு இருக்காது என்று சமாளிக்கிறார். ஈரான் ட்ரம்பின் இந்த பின்னடைவை கொண்டாடுகிறது.

ஈரான் மீதான ட்ரம்பின் தடாலடி நடவடிக்கையால் உலக அளவில் பெட்ரோல் மற்றும் எரிவாயு பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அமெரிக்காவுக்கும் இந்த சங்கடம் இருந்தது. இதனால் 3.7% விலைவாசி உயர்வை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று வாக்காளர்கள் கருத்துக்கணிப்பில் ட்ரம்புக்கு எதிராக கருத்து சொல்லி இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் அமெரிக்காவின் பண வீக்கம் தங்களுக்கு பொருளாதார சிரமங்களை ஏற்படுத்தியதாக கூறி இருக்கிறார்கள்.

வாழ்க்கை செலவு அதிகரிப்பதற்கு டிரம்பின் கொள்கைகளே காரணம் என்று 60% பேர் குற்றம் சாட்டினார்கள்.

இனிமேல் யாரும் அமெரிக்காவை பாருங்கள் என்று உதாரணம் எல்லாம் சொல்லாதீர்கள். இந்தியாவுடன் ஒப்பிடும் போது அமெரிக்கா மிகவும் மோசமானது தான்.