
குதூகலம் தேடித் தரும் தீபாவளி...!!
மங்கள நாள் ஒன்று வாழ்வில் வரும் நேரம்...
மகிழ்ச்சி தருணங்கள் மன நிறைவு தரும்...!
தீபாவளி அவ்வகையில் குதூகலம் தேடித் தரும்...!
இணையும் பந்தங்கள் தந்திடும் மகிழ்ச்சி…
தீபத்திருநாள் என்னும் அற்புத நிகழ்ச்சி...!
மனதில் எங்கோ ஏதோ சோகம் இருப்பினும்...
எளிதில் விலகி எதுவும் மறைந்து போகும்...!
சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் சிரிக்கும் முகங்கள்...!
பற்றிக் கொள்ளும் ஆனந்தம் நான்கு புறங்கள்...!
சிதரும் மத்தாப்பு ஒளிக்கதிர்கள் எங்கும்...!
உதிரும் புன்னகையில் மகிழ்ச்சி பொங்கும்...!
ஒளிரும் வெளிச்சம் தரும் ஒரு புதுவாழ்க்கை...!
துளிரும் எல்லோர் வாழ்விலும் நம்பிக்கை...!
குற்றம் குறைகள் அத்தனையும் மறந்து...
சுற்றம் நட்பும் ஒன்று சேர்ந்து மகிழ்ந்து...
கொண்டாடி மகிழ்வோம் தீபாவளி...!!
தீபாவளி வாழ்த்துகள்...!!
பாலா கோவை

Leave a comment
Upload