தொடர்கள்
தீபாவளி ஸ்பெஷல்
" ஊட்டி.. நினைவில் நிற்கும் அந்தக்கால தீபாவளி " -ஸ்வேதா அப்புதாஸ்

தீபாவளி நெருங்க நெருங்க ஒரு வித உற்சாகம் நம்முள் எழுவது சகஜம்.
பள்ளி படிக்கும் போது பட்டாசு சப்தம் கேட்டாலே நம்முள் குதுகலம் ஏற்பட்டு விடுமுறை எப்பொழுது என்ற எண்ணம் நம்மை கவ்வி கொள்ளும்.

20261006100301794.jpeg
பள்ளி விட்டு மாலை வேளையில் மார்க்கெட் பக்கம் ஒரு ரௌண்டப் செல்வது ஒரு திரில்லிங்.
ஊட்டியில் மெயின் பசார் கமர்ஷியல் சாலை மற்றும் மார்க்கெட் மட்டும் தான் முக்கிய ஷாப்பிங் இடங்கள்.
மெயின் பசாரில் உள்ள வெரைட்டி ஹால், தீப் சந்த்,திருப்பூர் ஜவுளி கடைகள் முக்கியமாக விஜயம் செய்யும் இடம்.

20261005191207493.jpeg
பட்டாசு கடைகளுக்கு என்று தனி இடங்கள் ஒதுக்கப்பட்டு தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அனுமதி கிடைத்து சேல்ஸ் களைகட்டும்.
அம்மாவிடம் பட்டாசு வாங்கி கொடுங்க என்று சற்று கெஞ்சி கேட்க அம்மா மத்தாப்பு, சங்கு சக்கரம், கேப், துப்பாக்கி, பிஜிலி பட்டாசு வாங்கி கொண்டு வந்து பயத்துடன் வெடிக்க
"டேய் பாத்து வெடி கண், கை பத்திரம் " என்று பாட்டி சத்தம் இன்னும் என் காதில்.
20261005191300397.jpeg

நம் வீட்டில் பட்டாசு சத்தம் கேட்கும் முன் எங்க ஏரியாவில் அதிரும் சத்தம் !
அப்பா வருடந்தோறும் இரண்டு தீபாவளி கிரீட்டிங் கார்டு வாங்கி அதில் வாழ்த்துக்களை எழுதி ஒரு வாரத்திற்கு முன்பே தன் உற்ற நண்பர்களான கோபால் மற்றும் திருமலைக்கு போஸ்ட் செய்வது வழக்கம்.
20261005191325297.jpeg
அவர்களும் கிறிஸ்துமஸுக்கு தவறாமல் அப்பாவுக்கு கிரீட்டிங்ஸ் அனுப்பிவிடுவார்கள்.
அப்பாவுடன் அந்த உற்ற நண்பர்களின் வீட்டிற்கு விசிட் செய்வது வழக்கம் அதிரசம், முறுக்கு, கல கலா, லட்டு என்று குவித்து வைக்க அந்த பலகாரங்களை ருசி பார்ப்பதற்குள் பிரியாணியும் ரெடியாகும். இரண்டு வீட்டிலும் டேஸ்ட் செய்து விட்டு வந்ததை மறக்க முடியாத ஒன்று.
மெயின் பசார் முழுவதும் ஜெயின் சமுதாய வியாபாரிகள் தீபாவளி அன்று தங்களின் கடைகளை புதுப்பித்து ஜோடித்து பட்டாசு வெடி காதை பிளக்கும்
நாம் அந்த வழியாக வர சில நண்பர்கள் வலுக்கட்டாயமாக அழைத்து ஸ்வீட் பாக்ஸ் கொடுப்பது வழக்கம்.
20261005191613102.jpeg

(தற்போது அந்த ஜெயின் சமூகத்தினர் பட்டாசு வெடிப்பதை நிறுத்திவிட்டனர் மாசு பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது )
தீபாவளி அன்று அதிகாலை பட்டாசு சப்தம் கேட்டு தான் முழிப்பே வரும் நாமும் அவசரமாக எழுந்து என்னமோ சாதிப்பது போல ரெடியாகி வீட்டின் வெளியெ சென்று புத்தாடை அணிந்து செல்பவர்களை பார்ப்பதில் ஒரு அலாதி.

20261006100114661.jpeg
கோயில் மணி ஓசை பட்டாசு சப்தம் நம்முள் ஒரு ஜாலி முட் வந்து விடும்.
வீட்டினுள் வந்தால் ரேடியோவில் திரைப்பட பாடல்கள் ஒலித்து கொண்டிருக்கும்.
20261005191653229.jpeg
"உன்னைக்கண்டு நானாட என்னை கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி "
என்ற பாடலை இன்றும் என்னால் மறக்கமுடியாது.
பட்டாசு சப்தத்தால் ரேடியோ முழு சப்தத்தில் இருக்கும்.
அப்பொழுதெல்லாம் FM ஒலிபரப்பு என்பது கிடையாது ஆல் இந்தியா ரேடியோ வி வித் பாரதி வானொலி நிலைய நிகழ்ச்சிகள் தான்.
இலங்கை வானொலி நிலையத்தில் இருந்து தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் அருமையாக இருக்கும் அந்த கால திரைப் படப்பாடல்களுக்கு பஞ்சமே இருக்காது.
P.சுசீலா, ஸ்ரீனிவாஸ், டி. எம். சௌந்தர்ராஜன், எஸ். ஜானகி, எல். ஆர். ஈஸ்வரி, சீர்காழி கோவிந்தராஜன் குரல்கள் ஒலித்து கொண்டே இருக்கும்.

அப்பொழுதெல்லாம் டி வி இல்லாத காலம் தியேட்டரில் புது படம் ரீலிஸ் ஆகும் முதல் காட்சிக்கு ஏகப்பட்ட கூட்டம் அலைமோதும்!
எனக்கு தெரிந்து நடிகர் திலகம் சிவாஜி கணேஷன், எம். ஜி. ஆர். படங்கள்.
பின்னர் ரஜினி, கமல், பாக்கியராஜ் படங்கள்.
பாரதிராஜா படங்கள் 'மண்வாசனை'
என்று மறக்கமுடியாத படங்கள் என் நினைவில்.
நான் தீபாவளி அன்று படத்திற்கு போக புடிக்காது அதே சமயம் கூட்டத்தை பார்க்க விசிட் செய்த காலங்களை நினைத்து சிரிப்பு வருகிறது.
20261005192421509.jpeg
எப்படியும் தீபாவளி முடிந்து வரும் வாரங்களில் புது ரீலிஸ் படங்களை பார்த்துவிடுவது ஒரு திரில்லிங் தான்.
மறக்கமுடியாத ஏ டி சி, கணேஷ், லிபெர்ட்டி, கார் னேஷன், கணபதி, ரோகிணி,கெம்கெம்பேகௌடா, அசெம்பிளி ரூம்ஸ் திரையரங்குகளை மறக்க முடியாது.

அந்த காலத்திலும் மழை கொட்டி தீர்க்கும் தீபாவளி அன்று மழை வேண்டாம் என்று நினைத்து கொள்வோம் நல்ல வெயில் என்றால் ஒரு குஷு தான்.
எங்க வீட்டுக்கும் நிறைய பலகாரங்கள் அடுத்த வீடுகளில் இருந்து வந்து சேரும்.
20261005191939350.jpeg
அம்மா, அப்பா,அத்தை ஆசிரியர்கள் என்பதால் அவர்களின் சில மாணவர்களும் பலகாரங்களை கொண்டு வருவது என் நினைவில் இன்றும்.
ஊட்டியில் தீபாவளி மழையால் ஈரமாக இருப்பதும் சகஜம் தான்.
அந்த கால தீபாவளி நாட்கள் என்றும் என் நினைவில் மத்தாப்பாக பளிச் என்று இருக்கிறது.
இன்று நீலகிரி பர்லியார் நிலச்சரிவு மற்றும் தொடர் மழையால் தீபாவளி ஈரமாக இருக்கிறது போக்குவரத்து நெரிசல் சொல்லவே வேண்டாம்.
20261005192209418.jpeg
தற்போது ஊட்டி வந்து போகவேண்டுமானால் ஒரே வழி கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையை நம்பி தான் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது கடினமான ஒன்று.
அனைவருக்கும் அந்த கால தீபாவளி வாழ்த்துக்கள்.