தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா - லைட்பாய்

ஜேசன் சஞ்சய்

20261006154544266.jpg

ஜேசன் சஞ்சய் இயக்கிய படம் சிக்மா பெரிய அளவு வரவேற்பு பெறவில்லை என்பதால் கதாநாயகனாக நடிக்க முடிவு செய்து இருக்கிறார். அட்லீயிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் இவரை இயக்க இருக்கிறாராம் ஜோடியாக நடிக்க ஜான்விகபூருடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்ரீலீலா

20261006154354883.jpeg

ரஜினி நடிக்கும் 173-வது படம் தர்மன். இந்தப் படத்தில் ஏற்கனவே சிம்ரன், ராஷி கண்ணா ஆகியோர் ஒப்பந்தமாக இருக்கும் நிலையில் இப்போது அந்தப் படத்தில் ஸ்ரீலீலாவும் இணைந்து இருக்கிறார்.

நஸ்ரியா

20261006163247888.jpg

சமீபத்தில் ரிலீசான சூர்யாவின் 'சீன் 'படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார். ஏற்கனவே சூர்யாவின் மூன்று படங்களுக்கு அவரை சூர்யா அழைத்த போது அவர் நோ சொல்லிவிட்டாராம். நான்காவது படத்திற்கு தான் அவர் ஒப்பு கொண்டிருக்கிறார் என்ற தகவலை சூர்யா இந்தப் படம் பற்றிய நிகழ்ச்சியில் சொல்லி இருக்கிறார்.

ராதிகா ஆப்தே

20261006170348208.jpg

2014-இல் தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் 'லெஜன்ட் ' என்ற படத்தில் ராதிகா ஆப்தே அவருக்கு ஜோடியாக நடித்தார். சமீபத்தில் அந்தப் படம் பற்றி குறிப்பிட்டு "நான் நடித்த ஒரு தெலுங்கு படத்தில் எனது மாமாவை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. அதில் என்னைவிட மிகவும் வயதான ஒரு நடிகருடன் காதல் காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. எனக்கு அது மிகவும் கடினமான விஷயமாக இருந்தது என்று அவர் பாலகிருஷ்ணனை விமர்சனம் செய்தது" பாலகிருஷ்ணா ரசிகர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

தபு

20261006170204981.jpg

கார்த்திக் இயக்கத்தில் நாகார்ஜுனாவின் நூறாவது படமாக கிங் உருவாகிறது. இந்தப் படத்தில் நடிகை தபு அதிர்ஷ்டத்தை வெறுக்கும் அதிகாரம் மிக்க ' மஹந்தி ஜான்சிராணி ' என்ற சக்தி வாய்ந்த பெண் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரஜினி

20261006164717310.jpg

ஜெர்மனியில் பெரிய அளவு தமிழ் படங்களுக்கு வரவேற்பு இருக்காது என்பதால் தமிழ் பட தயாரிப்பாளர்கள் ஜெர்மனியில் தமிழ் பட ரிலீஸில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால், முதல் முறையாக ஜெர்மனியில் ரஜினியின் ஜெய்லர் 2 ரிலீஸ் ஆகி ஆறு கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. ஜெர்மனியிலும் இப்போது ரஜினிக்கு ரசிகர்கள்..

அதுல்யா ரவி

தமிழ், தெலுங்கு, மாடலிங் என்று பிஸியாக இருக்கும் கொங்கு மண்டல அழகி அதுல்யா ரவி "ரசிகர்களை ஈர்ப்பது தான் என் லட்சியம். அப்படித்தான் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்கிறார்.

அஜித்

20261006163814503.jpg

அஜித் குமார் மனைவி ஷாலினி தயாரிக்கும் படத்தில் தற்சமயம் ஸ்ரீலீலலா இணைந்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித், மகளாக ஸ்ரீ லீலா நடிக்கிறார் என்று ஒரு பேச்சு வந்தது. தயாரிப்பு தரப்பு அதை மறுத்திருக்கிறது. ஸ்ரீ லீலா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று மட்டும் தெரிவித்திருக்கிறது.

ஷாலினி

20261006165211840.jpg

ஷாலினி அஜித் தயாரிக்கும் படத்திற்கு 'டேர் டெவில்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் ரா பார்த்திபன் நடிக்கிறார். படப்பிடிப்பு பூஜை அன்று அந்த காலத்துதிரைப்பட ப்ரொஜெக்டர் ஒன்றின் மினியேச்சரை பரிசாகத் தந்த அசத்தியிருக்கிறார் பார்த்திபன்.

@ ஒரு கூல்ட்ரிங்ஸ் விளம்பரத்தில் நடித்திருக்கும் நடிகர் அஜித் தற்சமயம் ஒரு பிஸ்கட் விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.

ரெஜினா

2026100616541933.jpg

நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார் ரெஜினா. இந்த படத்தில் இவருக்கு விசேஷமான மேக்கப் போடப்பட்டது. ஒவ்வொரு நாளும் அதற்கென்று இரண்டு மணி நேரம் செலவானது.

நயன்தாரா

20261006155427699.jpg

நயன்தாராவும் நஸ்ரியாவும் நெருங்கிய தோழிகள். நஸ்ரியா சூர்யாவுடன் நடித்த 'சீன் 'படம் வெளியாவதில் மகிழ்ந்த நயன்தாரா இன்ஸ்டாகிராமில் "உங்களை மீண்டும் திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் ."என்று பதிவு செய்து தனது அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்குப் பதிலாக நஸ்ரியா உங்களது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று பதிவு செய்திருக்கிறார்.

சாரா அர்ஜுன்

20261006161530204.jpg

20261006160112575.jpeg

'மாலத்தீவில் மாலை பொழுதில்' என்று மாலத்தீவில் இருக்கும் புகைப்படங்களை நடிகை சாரா அர்ஜுன் சமூக வலைதளத்தில் பதிவு செய்து ரசிகர்களை இழுத்திருக்கிறார்.

கீர்த்தி ஷெட்டி

20261006165641624.jpg

இயக்குனர் சங்கரின் மகன் அர்ஜித் சங்கர் நடிக்கும் ' லவ்வர் பாய் ' படத்தில் நடிக்கிறார் கீர்த்தி ஷெட்டி.

கீர்த்தி சுரேஷ்

20261006164236816.jpg

திருமணத்துக்கு பிறகு பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் முத்த காட்சிகள் மட்டும் படுக்கை அறை காட்சிகளுக்கு தடை சொல்வதில்லை. "கதைக்கு அவசியம் என்று இயக்குனர் சொல்லும் போது அதை தவிர்க்க முடியவில்லை" என்கிறார் நடிகை.

வித்யா பாலன்

20261006164505621.jpg

ஜெயிலர் 2 படத்தில் வில்லியாக நடித்ததை தொடர்ந்து வித்யா பாலனுக்கு வில்லி வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் வரத் தொடங்கி இருக்கிறது.

நெல்சன்

ஜெயிலர் 2 படம் வெற்றிக்கு பிறகு ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவது உறுதியாக இருக்கிறது.