
விஜய் அரசை கவிழ்க்க திமுக, அதிமுக கூட்டுசதி
தலைவரே நம்ம புதுசா கொஞ்சம் யோசிப்போம் !!
அமெரிக்கா இடைத்தேர்தல் ட்ரம்பின் குடியரசு கட்சி படு தோல்வி !!
ஒரு வேளை ஈரான் கள்ள ஓட்டு போட்டு இருப்பாங்களோ ?
சாதி வாரி இட ஒதிக்கீட்டை சாத்தியமாக்க, சமூக நீதிப் போராட்டத்தை தொடங்க வேண்டும். அன்புமணி ராமதாஸ்.
மரம் எல்லாம் வெட்டி போட மாட்டீங்க இல்லே ?
டாஸ்மாக் காலி பாட்டில்களுக்கு வங்கிக் கணக்கில் வரவு, தானியங்கி இயந்திரங்கள் நிறுவ அரசு உத்தரவு.
போதையில் ஏ டிஎம் கார்டுல பணத்துக்கு பதில் பாட்டில் வந்து விழப் போகுது ?
நீட் தேர்வு எதிர்ப்பு நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. முதல்வர் விஜய் மத்திய அரசு குழுவிடம் தகவல்.
ஆனா அவங்க நடத்துறதுல உறுதியா இருக்காங்க !!
மிரட்டியே பணம் வசூலித்தாரா அரசகுமார் ? எனக்குத் தெரியாது என்கிறார் அன்பில் மகேஷ்.
நல்லவேளை அரசகுமாரா ? அவர் யாரென்று கேட்கவில்லை ?
உண்மையை தமிழக நிதி அமைச்சர் ஒப்புக்கொள்ளணும் திமுக அட்வைஸ்.
அதாவது நீங்க சொல்ற உண்மையை ? அப்படித்தானே !!
400 டன் வெங்காயம் கொள்முதல் ஆணை ரத்து தமிழக அரசு தகவல்.
முதலமைச்சருக்கு வெங்காயம் கூட வாங்க தெரியாதா ? என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் !!
அதிமுகவிலிருந்து விஜய் கட்சிக்கு தாவிய விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்.
அமலாக்கத்துறை கிட்ட அவர் சொல்லலையா ?
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை.
அவருக்கு சொத்து எதுவும் இல்லைன்னு நீதிமன்றம் சொல்லிடுச்சோ ?
துணைவேந்தர் இல்லாத 14 பல்கலைக்கழகங்கள் அரசுத்துறை செயலாளரிடம் விளக்கம் கேட்டது நீதிமன்றம்.
விளக்கம், வேந்தர் பதவியில் இருக்கும் ஆளுநரிடம் தானே கேட்டிருக்க வேண்டும் ?
ஒரு வாரத்துக்கு ஆறு காட்சிகள் திரையிட அனுமதி முதல்வர் விஜய் உத்தரவு.
ஆமா, ரொம்ப முக்கியம் !!
டாஸ்மாக் ஊழியர் வேலை நிறுத்தத்தால் மக்கள் பணத்தை வீட்டில் கொடுத்து இருப்பார்கள் அமைச்சர் விக்னேஷ்.
ஊழியர்கள் நிரந்தரமாக வேலை நிறுத்தம் செஞ்சா எல்லா குடும்பமும் சந்தோஷப்படும் அதுக்கும் அமைச்சர் ஏற்பாடு பண்ணனும்.

Leave a comment
Upload