தொடர்கள்
அனுபவம்
'“விகடகவிக்கு நீலகிரி கலெக்டரின் வாழ்த்துக்கள்"

20201027211110730.jpeg

ஆரம்பத்தில் இருந்தே நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா விகடகவி டிஜிட்டல் இதழை படிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

நாம் அவரை விகடகவிக்காக சிறப்பு பேட்டி எடுத்தபோது, இந்தப் புதிய பயணத்திற்காக வாழ்த்துக்கள் தெரிவித்தார்..

தற்போது ‘விகடகவி’ மூன்றாவது ஆண்டை முடித்து, நான்காம் ஆண்டினுள் அடியடுத்து வைப்பதற்கு தன் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்ததோடு...

“இன்றைய ஜர்னலிச பயணத்தில் ஒரு புதிய கண்ணோட்டத்துடன், புதிய பாதையில் அனைத்து விஷயங்களையும் உன்னிப்பாக ஆராய்ந்து ஒரு ஆழமான ஆக்கபூர்வமான ரிப்போர்டிங் படைப்பது விகடகவி தான்.. அதிலும் ஒரு இ-பத்திரிகையாக வலம் வருவது பாராட்டுக்குரியது... மேலும் எங்களைப் போல நிர்வாகத்தில் பணிபுரிபவர்களுக்கு ஒரு சிறந்த ஊக்குவிப்பையும் தருகிறது விகடகவி...

மீண்டும் விகடகவி குடும்பத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!” என தனது ஆக்கபூர்வமான வாழ்த்தினை தெரிவித்தார்.