நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர் ஜே. டபிள்யூ. பிரிக்ஸ் இவர் 1868 முதல் 1872 வரை பணியாற்றினார் அவர் பெயரில் ஒரு பள்ளி செயல் படுகிறது.
1963 வரை பிரிட்டிஷ் கலெக்டர்கள் பணிபுரிந்துள்ளனர்.
1963 முதல் இந்திய கலெக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இது வரை 116 கலெக்டர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இத்தனை கலெக்டர்கள் பணிபுரிந்திருந்தாலும் 113 வது கலெக்டரான இன்னசன்ட் திவ்வியாவை மலைகளின் அரசி இன்று வரை மறக்க வில்லை என்பது தான் உண்மை !.

10-7-2017 முதல் 22-10-2021 வரை பணியாற்றிய நாட்கள் நீலகிரி மாவட்டம் ஒரு சிறந்த மாவட்டமாக திகழ்ந்தது.
ஊட்டிக்கு வந்த முதல் நாளே கலெக்டர் விசிட் செய்த இடம் அரசு தலைமை மருத்துவமனை. நோயாளிகளிடம் பேசி அனைத்து தேவையான வசதிகளை செய்தார்.
ஊட்டி நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் சுத்தம் கடைபிடிக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் இன்னசன்ட் திவ்வியா.
பொது சுகாதாரம் போக்குவரத்து என்று பெரிய மாற்றங்கள் வந்தன.

அதிகாலை மற்றும் இரவு ரௌண்ட்ஸ் சென்று அதிரடி ஆக்ஷனை எடுத்தார் கலெக்டர்.
முதியோர் இல்லங்களை அவ்வப்பொழுது விசிட் செய்து அவர்களை அரவணைத்து ஆறுதல் கூறி உதவிகளை செய்து வந்ததை மறக்கமுடியாது.
தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்க்க மூத்தோரை பாலடா பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட குடியிருப்பு வாசிகளை காப்பாற்ற கயிறு கட்டி சென்ற கலெக்டர் வெள்ளத்தில் சிக்கி மீண்டு வந்தார்.

ஊட்டிக்கு சுற்றுலா என்ற பெயரில் பைக், ஸ்குட்டரில் குழந்தைகளை அமர வைத்து குடும்ப சகிதமாக ஆபத்தான பயணத்தை மேற்கொள்பவர்களை செக் போஸ்டில் நிறுத்தி திருப்பி அனுப்பினார் கலெக்டர்.
கொரானா அலை துவங்க அதிரடியாக 24 மணிநேரத்தில் மாவட்டத்தை சீல் செய்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை பத்திரமாக வெளியேற்றினார் கலெக்டர்.
இரவு பகல் என்று பாராமல் பம்பரமாக சுழன்று உள்ளூர் வாசிகளின் உயிரை காத்தார்.
அவ்வப்பொழுது பொது மக்களின் ஆலோசனைகளை கேட்டு பணிசெய்த ஒரே கலெக்டர் இவர்.
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஊட்டியில் அமைய அரசுடன் பல முறை பேசி முடிவெடுத்து அடிக்கல் நாட்டின கலெக்டர்.

வனங்கள், இயற்கை சூழல் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து புலிகள் காப்பகத்தினுள் கட்டின காட்டேஜ்களை சீல் செய்து நடவடிக்கை எடுத்ததை உச்சநீதி மன்றம் பாராட்டி கலெக்டருக்கு முழு அதிகாரத்தை கொடுத்தது நாட்டில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கலெக்டரை அதிரடியாக மாற்றியதை இது நாள் வரை ஜீரணிக்க முடியவில்லை.
கலெக்டர் மாற்றம் என்றவுடன் கண்கலங்கி நின்றாள் மலைகளின் அரசி.
இன்று மாவட்டத்தில் எல்லாம் தலைகீழ் !.
இன்றும் மலைகளின் அரசியின் நினைவில் மறக்கமுடியாமல் உலாவி கொண்டிருக்கிறார் இன்னசன்ட் திவ்வியா !.

Leave a comment
Upload