தொடர்கள்
விகடகவியார்
இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை

20261027200035426.jpeg

இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை என்கிற அமைப்பை திருநெல்வேலியில் திரிஷா ரசிகர்கள் தொடங்கி இருக்கின்றனர். திரிஷாவை பற்றி தினந்தோறும் எதாவது ஒரு வதந்தி வரும் இந்த சூழ்நிலையில் இப்போது இந்த பேரவை பரபரப்பு செய்தியாகி இருக்கிறது. திரைப்படத்தை தாண்டி விஜய் முழு நேர அரசியல் ஈடுபட்டதிலிருந்து முக்கிய நிகழ்வுகளில் அவருடன் திரிஷா கலந்து கொள்வது விவாத பொருளாகியிருக்கிறது. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா ,ஆனந்த் மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் அடிக்கடி திரிஷாவை சந்திப்பதாகவும் செய்தி வருகிறது.

தற்போது திரிஷாவுக்கு இளைய புரட்சித்தலைவி பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது திருநெல்வேலி பேரவை தொடங்கப்பட்டிருக்கிறது. இது போதாது என்று சில நாட்களுக்கு முன்னால் தியாகச்சுடர் திரிஷா பேரவை என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளத்தில் புகைப்படங்களுடன் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்புகளை எல்லாம் திரிஷா சம்மதத்துடன் ரசிகர்கள் தொடங்கினார்களா என்று தெரியவில்லை.த்ரிஷாவிற்கு சமூக வலைதளத்தில் மக்கள் தலைவி என்ற பட்டமும் இப்போது வைரல் ஆகியுள்ளது. திரிஷாவிடம் இருந்து இதுவரை எந்த மறுப்பும் வரவில்லை. ஒருவேளை மௌனம் சம்மதமோ என்னவோ தெரியவில்லை.