
அம்சி மும்பை என்று எவரும் கொண்டாடும் நகரம் மும்பை.
மேக்சிமம் சிடி என்றும் அடைமொழி இதற்குண்டு.
இங்கு எப்படியும் சம்பாதிக்கலாம். வந்தாற்கு தப்பாது வாழ்வளிக்கும் அடைக்கலம் தரும் இடம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்த நகரத்தைப் பத்தி சட்டுனு சொல்லணும்னா இதோ கீழே:
எத்தனை மொழிகள் கேட்குமோ இங்கு!!!!
இந்தியாவில் கிட்டத்தட்ட 780 மொழிகள் பேசப்படுகிறது. இந்தியாவின் நிதி தலைநகரமாம் மும்பையிலும் அத்துணை மொழிகளும் சரளமாக பேசப்படுகின்றன.


---------
டப்பாவாலா
சுமார் ஐந்தாயிரம் டப்பாவாலாக்கள் இரண்டு லட்ச மும்பைவாசிகளுக்கு இல்லத்திலிருந்து மதிய சுடச் சுட உணவு அவர்து பணியிடங்களுக்கே சென்று லன்ச் டைமுக்கு முன்பு வழங்கிவிட்டு அடுத்த ஒரு மணி நேர இடைவெளிக்குப்பிறகு காலியாகிவிட்ட உணவு டப்பாக்களை அவரவர் இல்லங்களிலேயே மாலைக்குள் சேர்ப்பித்தும் விடுகின்றனர்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இல்லங்களில் டப்பாக்களை கலெக்ட் செய்பவர் ஒருவர், அதை ட்ரைனில் தூக்கிக்கொண்டு செல்பவர் ஒருவர், சர்ச்கேட்டிலும், வீ டீயிலும் வாங்கிக் கொண்டு அந்தந்த பணியிடங்களின் ஏரியாவிற்கேற்ப அந்த டப்பாக்கள் எடுத்துச் சென்று காண்டீங்களில் இதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வைத்துவிட்டு செல்வபர் ஒருவர்.
இந்த செயல்பாடில் இதுவரை தவறே நடந்ததில்லை. உலகப் புகழ் பெற்ற மேனேஜ்மென்ட் காலேஜ்களும் இந்த சிக்ஸ் சிக்மா மணி தரக்குறியீட்டில் செயல்பாடு எப்படி என்று இன்றும் வியக்கின்றனர். இத்தனைக்கும் அந்த ஐய்யாயிர அலவலர்கள் பள்ளி கல்வியும் தாண்டியதில்லை.
நூறு கி.மீ தொலைவிலிருந்தும் இந்த சேவை கிடைக்கிறது.

---------

மும்பை லோகல் ரயில் பயணம்
மும்பைக்கு மூச்சே இந்த லோகல் ரயில் சர்வீஸ் தான். இல்லையெனில் மும்பை ஸ்தம்பித்துவிடும். லோகல் ட்ரெய்ன் ஒடவில்லையெனில் மும்பைக்கு லீவு தான்.
கிட்டத்தட்ட 120 கி.மீ வரை லோக்கல் ரயில் சர்வீஸ் தான் உண்டே.
இதை ஒரு கவிதையில்

------------------
கணபதி கொண்டாட்டங்கள்
நகரமே கொண்டாடும் கணபதி விழா

---------
மௌன்ட் மேரி திருவிழா
மத வர்ணங்களில்லாமல் கொண்டாடப்படும் பாந்த்ரா பகுதியில் நடைபெரும் திருவிழா இது.

------------------
ஆசியாவிலேயே பெரிய சேரி
தாராவி எனும் பகுதியைத் தான் இந்த அடைமொழியுடன் அழைக்கிறார்கள்.மட்டுங்கா, சையான், கோலிவாடா என்ற பகுதிகளின் அருகாமையில் இந்த பெரிய இருக்கிறது. இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் இங்குண்டு. ஒரு பெரிய பொருளாதார புழக்கமே இங்குண்டு. அனைத்து கைவினை தயாரிப்புகள் கொண்ட சிறுதொழில்கள் இங்கு ஏராளம். 550 ஏக்கர் அளவில் ஒரு மில்லியன் மக்கள் வாழும் பகுதியிது. இங்கு வருடத்திற்கு சுமார் 1.5 பில்லியன் டாலர் வருவாய் வருகிறது

--------------------------
வானுயர தீப்பெட்டி கட்டிடங்களும் இடையே தரையே தெரியாத குடியிருப்புகளும்


-----------
பாலிவுட் நடிகர்களின் இல்லத்திலிருந்தபடியே தரிசனம்
அமிதாப் பச்சன், ஷாருக்கான் போன்ற பிரபல பாலிவுட் நடிகர்களின் இல்லத்திற்கு வெளியே அவர்களின் தரிசனத்திற்காக எப்போதும் நின்றிருக்கும் ரசிகர்கள். அதுவும் அவர்களது பிறந்த நாளென்று வந்து விட்டாலோ அங்கே ஒரு திருவிழா தான்.

பிரிக்கமுடியாதது எதுவோ?
நடிகர்களும் ரசிகர்களும்
இந்த லிஸ்ட் முடிக்கவே முடியாதது.

Leave a comment
Upload