தொடர்கள்
தமிழ்
தமிழ் வழங்கும் நீதி- மரியா சிவானந்தம்

20261028052140291.jpg

காதலையும் வீரத்தையும் தமது இரு கண்களாக கொண்டது தமிழர் பண்பாடு.

ஆனால் தமிழரின் இதயமாக இருப்பது அறம்.

தமிழின் செழுமை மிக்க இலக்கிய படைப்புகளில் அறம் பேசும் நீதி இலக்கியங்கள் காலங்கள் கடந்து நிற்கின்றன.

திருக்குறள், நாலடியார் ,பழமொழி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், திரிகடுகம் போன்ற பதினெண் கீழ்க்கணக்கு நூற்கள் நீதி இலக்கியத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மிகச்சில வரிகளில் பேருண்மைகளை இந்நூல்கள் கூறுகின்றன.

இப்புதிய தொடர் , நீதி இலக்கியத்தின் ஒரு பகிர்வு..

இந்த இதழுக்கான முதல் பாடல் இதோ

நான்மணிக்கடிகை என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்ட பாடல் இது.

மனிதனுக்கு அவன் வாழ்வில் சிறந்தவை எவை என்று அடையாளம் காட்டுகிறது இப்பாடல்.

"கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை; கொண்டானின்

துன்னிய கேளிர் பிறர் இல்லை; மக்களின்

ஒண்மைய வாய் சான்ற பொருள் இல்லை; ஈன்றாளின்

என்ன கடவுளும் இல்.

[நான்மணிக்கடிகை- 57]

இப்பாடலைப் படிக்கும் போதே பொருள் விளங்குகிறது.

கண்ணைக் காட்டிலும் சிறந்த உறுப்பு வேறு இல்லை

மனைவிக்குத் தன் கணவனைப் போன்ற சிறந்த துணை எவரும் இல்லை

பெற்றோருக்குத் தன் மக்களை விட உயர்ந்தப் பொருள் வேறேதும் இல்லை.

தாயைப் போன்ற தெய்வம் ஒருவருக்கு வேறில்லை ..

அடுத்த வாரம் வேறு ஒரு பாடலுடன்..

சந்திப்போம்