தொடர்கள்
விகடகவியார்
பொய் சொன்ன அமைச்சர்கள்

2026102720124294.jpeg

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் இது உண்மை என்றால் துரதிர்ஷ்டவசமானது என்று கருத்து சொல்லி இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

காவல்துறை தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலாளர் உட்பட யாரிடம் இருந்தும் எந்த புகாரும் வரவில்லை என்று கூறியபோது மனுதாரர் தரப்பில், இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் காவல்துறை தலைமை இயக்குநரிடம் விளக்கம் கோரியுள்ளது. ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அனைத்து உயர் அதிகாரிகளும் அவரை பாதுகாக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியது.

கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது அனைத்து மகளிர் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.

உயர்நீதிமன்ற நீதிபதி ஆட்சியருக்கு எதிராக அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த வழக்கை மாவட்ட கண்காணிப்பாளர் விசாரிப்பதற்கு பதில் டிஐஜி அல்லது ஐ ஜி விசாரணை கண்காணிக்க வேண்டும் என்று உத்தர பிறப்பித்தார்.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் வீட்டிற்கு போலீசார் சென்று விசாரித்தார்கள். திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டார். ஐஜி காமினி விசாரணையை கண்காணிப்பார் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மாவட்டப் பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக வழக்கை சிபிஐ வாசம் ஒப்படைக்க வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மனு கொடுத்து இருக்கிறார்.

அவர் அந்த மனுவில் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆபாச மெசேஜ் அனுப்பி இருப்பது, தமிழ்நாடு வரலாற்றில் இது போல் இதுவரை நடந்ததில்லை. அந்த சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட பெண் ஆட்சியர் முகாம் அலுவலகத்திற்கு சென்று குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டிருக்கிறார்.

ஜூலை மாதம் இது நடந்திருக்கிறது. 116 நாட்களுக்கு முன்பே அந்தப் பெண் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளார். அதற்கு தலைமைச் செயலாளர் நீங்கள் வேறு மாவட்டத்திற்கு பணி மாறுதல் வாங்கிக் கொண்டு செல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

குற்றத்தை மறைக்க தலைமைச் செயலாளர் முயற்சி செய்திருக்கிறார் .பாதிக்கப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரியிடம் பேரம் பேசி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அவரை குற்றவாளியாக சேர்க்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டிருப்பதாக நிருபர்களிடம் பேட்டி அளிக்கும் போது குறிப்பிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆளுநர் அர்லேகரையும் சந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு தந்திருக்கிறார். எதிர்க்கட்சிகள் சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

நாடு முழுவதும் பதவியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் 4899 தேர்தல் பிரமாண பத்திரங்களில் 4881 பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்த அரசியல் சீர்திருத்தங்களுக்கான ஜனநாயக அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி 187 மக்கள் பிரதிநிதிகள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இருப்பதாக சம்பந்தப்பட்டவர்களே பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்று சுட்டிக் காட்டுகிறது. இவர்களில் 19 பேர் பாராளுமன்ற உறுப்பினர்கள் 168 பேர் சட்டமன்ற உறுப்பினர்கள்.

மாநிலங்கள் அடிப்படையில் மேற்குவங்கம் இதில் முதலிடத்தில் இருக்கிறது.

அங்கு 69 மக்கள் பிரதிநிதிகள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

தமிழ்நாடு இந்த பட்டியலில் 15-வது இடத்தில் உள்ளது.

இரண்டு சட்டமன்ற உறுப்பினர் ஒரு மக்களவை உறுப்பினர் என மொத்தம் மூன்று பேர் மீது பெண்கள் தொடர்பான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்தப் பட்டியலில் விரைவில் அருள் விக்னேஷ் பெயரும் சேர்க்கப்படும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகள் இருப்பதாக 14 மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்து இருக்கிறார்கள். இவர்களில் 12 பேர் சட்டமன்ற உறுப்பினர்கள்.

பெண் ஆட்சியர் புகார் அளித்து 117 நாட்களுக்கு பிறகு, இன்று (நவ.27) அருள் விக்னேஷை கைது செய்தது காவல்துறை.