தொடர்கள்
கவர் ஸ்டோரி
சீக்காவும் நானும் - பால்கி

20261028063736869.jpeg1985 மார்ச் 13 ஆம் தேதி சேம்பியன்ஸ் ஆஃப் சேம்பியன்ஸ் ட்ராஃபீ (1983ல் நாம் 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை ஜெயித்தது போலவே இந்த கோப்பையும்)யை ஜெயிச்சிட்டு தாயகம் திரும்பிய இந்திய அணி மும்பை வந்தது.

சில காரணங்களால் ஹீரோக்களை பத்திரிகையாளர்களால் சந்திக்கமுடியாமல் போனது.

20261028063911256.jpeg

20261028063830911.jpeg

அ(எ)ப்படியும் பார்த்துவிடலாம் நம்ம ஹீரோக்களை என்று இயங்கினேன். மும்பை ஐந்து நட்சத்திர ஹோடல்களை முற்றுகையிட்டேன். ஏர்போர்ட் அருகே செண்டார் ஹோட்டலில் இருப்பது தெரிந்து போன் செய்தேன். பத்திரிகயாளர் இல்லையே என்று தெரிந்தபின் எனது போன் ஸ்ரீகாந்த்திடம் சென்றது.

விகடன் என்றேன். பத்திரிகைக்கு பேட்டி கொடுக்க முடியாதே என்றவருக்கு நாம விவேகானந்தா காலேஜ்மேட்ஸ் மா என்றேன். எங்களிருவருக்கும் தெரிந்த போது நண்பன் சூச்சா பற்றி சொன்னேன்.

2026102806395051.jpeg

அப்புறம் என்ன? வாங்க பேசலாம் என்றார். அவருடன் தங்கியிருந்த அசருதீன், சதானந்த் விஸ்வனாத், சிவராமகிருஷ்ணன் போன்றோரைப் பார்த்தேன். சகஜமாக பேசினோம். 20261028064022245.jpeg

அன்றே ஆடி காரை வென்ற ரவி சாஸ்த்ரியை அவரது இல்லம் இருக்கும் குடியிருப்புக்கு சென்றேன். அவரை ஊர்வலமாக அழைத்து சென்றுகொண்டிருக்க நான் பத்திரிகையாளன் என்ற போது என்னையும் அவருடனேயே அவரருகில் நிற்கவைத்துவிட்டனர் ஏற்பாட்டாளர். ஹீரோக்களை கவர் செய்த ஒன்லி பத்திரகையாளன் நானாகத்தான் இருக்கும்.