தொடர்கள்
மருத்துவம்
ஆயுர்வேதத்தின் மகிமை -Dr. கார்த்திக் ராமநாதன் 

20261023192041292.jpeg

10 சிறந்த ஆயுர்வேதத்தின் மகிமை:

1. துளசி

சுவாச மண்டல ஆரோக்கியத்திற்கு பாரம்பரியமாகப் பயன்படுகிறது.5–7 புதிய இலைகளை வெந்நீரில் சேர்த்து அருந்தலாம்.

2. நெல்லிக்காய்

Vit-C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது(Anti-Oxdidant).

தினமும் ஒரு சிறிய நெல்லிக்காய் உணவில் சேர்க்கலாம்.

3. மஞ்சள்

பாரம்பரியமாக அழற்சி(anti-inflammatory ) எதிர்ப்பு பண்புகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.குர்குமின் மூட்டு அழற்சி மற்றும் வலி அறிகுறிகளைக் குறைக்க உதவக்கூடும்.

உணவில் ¼ தேக்கரண்டி மஞ்சள் சேர்க்கலாம்.

4.அஸ்வகந்தா

*ரசாயன மூலிகையாக ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படுகிறது.

* மன அழுத்தம் மற்றும் தூக்க ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும்.

* நரம்பு மண்டலத்துக்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்து,மருத்துவர் ஆலோசனையுடன் மட்டுமே பயன்படுத்தவும்.

5. சீந்தில் கொடி

* ரசாயன மூலிகையாக ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படுகிறது.

*நோய் எதிர்ப்பு செயல்பாடு (Immunomodulatory)

நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் திறன் உள்ளது.

6. சுக்கு / இஞ்சி

* ஜீரண சக்தி அதிகரித்து மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது.

*இரும்பல் மற்றும் தொண்டை கரகரப்புக்கு சிறிதளவு இஞ்சி சாறு சிறிதளவு தேனும் கலந்து அவ்வப்போது எடுத்துக் கொண்டால் இரும்பல் மற்றும் தொண்டை நோயிலிருந்து குணமடையலாம்.

7. அதிமதுரம்

* தொண்டை மற்றும் சுவாசப் பாதை நலனுக்குப் பாரம்பரியமாகப் பயன்படுகிறது.

* குரல் வளம், உடல் போஷணம் மற்றும் புத்துணர்ச்சியை அதிகரிக்கும்.

8. முருங்கை

* ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கீரை, வாரத்தில் 2–3 முறை உணவில் சேர்க்கலாம்.

*மூட்டுகளில் உண்டாகும் வலியை குறைத்து எலும்புகளின் சக்தியை அதிகரிக்கும்.

9.மிளகு

* செரிமானத்திற்கு உதவும் பாரம்பரிய சமையல் மூலிகை.

*நெஞ்சில் சேரும் சளியை குறைக்க சிறிதளவு மிளகு ,திப்பிலி ,சுக்கு சமமான அளவில் எடுத்துக்கொண்டு கொதிக்கும் நீரில் கலந்து வடிகட்டி சிறிதளவு தேனுடன் கலந்து எடுத்துக் கொண்டால் தொண்டையில் சேரும் நச்சுக்கிருமி மற்றும் நெஞ்சில் சேரும் சளியை குறைக்க உதவும்.

10.பிராமி

* நினைவாற்றல் மற்றும் மனநல ஆரோக்கியத்திற்காக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

* மனதை ஒருநிலைப்படுத்துவது மட்டுமல்லாமல் மூளையில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஒரு சிறந்த ரசாயன மூலிகை.

Home remedies -5 எளிய வீட்டு மருத்துவக் குறிப்புகள்

1.துளசி இஞ்சி தேநீர்

துளசி இலை 5+இஞ்சி சிறு துண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து அருந்தலாம்.

பயன்கள்-நுரையீரல் மற்றும் வயிற்றுக்கு ஒரு சிறந்த மருத்துவ குணத்தை அளிக்கும்.

2. தங்க பால்

150 மி.லி. வெதுவெதுப்பான பாலில் + 1/2 tsp மஞ்சள் +1/4tsp மிளகுத்தூள் சேர்த்து அருந்தலாம்.

பயன்கள்-நுரையீரலில் சேரும் சளி மற்றும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

3. நெல்லிக்காய் பானம் -

ஆயுர்வேதத்தில் ஒரு சிறந்த ரசாயனம்.

கொதிக்கும் நீரில் சிறிதளவு நெல்லிக்காய் வேக வைத்து உள்ளிருக்கும் கொட்டை வெளியேற்றி நன்றாக அரைத்து அத்துடன் சிறிது அளவு சுக்கு+ஏலக்காய் வெள்ளத்தை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் 15 முதல் 20 ml வரை உட்கொள்ளலாம்.

பயன்கள்

வாத,பித்த, கப்பம் தோஷங்களை சமான நிலையில் வைப்பது மட்டும் அல்லாமல் உடல் உஷ்ணத்தை குறைக்கும் மேலும் செரிமானத்திற்கு மிகவும் உகந்தது.

4. சீரக ஓமம் மல்லி தேநீர்.

சீரகம்-1/2tsp +ஓமம்-1/4tsp +மல்லி 1/2 tsp அனைத்து விதைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தலாம்.

பயன்கள்

உடல் உஷ்ணத்தை குறைக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும் ,தேக சருமத்தை மேன்மையாக வைத்திருக்கும், வயிறு மற்றும் குடலில் உள்ள நச்சு கிருமியை வெளியேற்றும்.

5. தேங்காய் பால் குடிநீர் 

தேங்காயிலிருந்து fresh -ஆன பாலை எடுத்து தினமும் வெறும் வயிற்றில் 15 முதல் 20 ml வரை மூன்று மாதத்திற்கு குடித்து வந்தால் வயிற்று அல்சர் அல்லது வயிற்றுப்புண் படிப்படியாக குறைந்து வரும்.

20261023222109314.jpg

என்றும் உங்கள் அன்புடன் 

Dr. கார்த்திக் ராமநாதன் 

ஆயுர் ஸ்பர்ஷா

பொன்னேரி