தொடர்கள்
ஆன்மீகம்
இறைவனின் மாறுபட்ட கோலங்கள்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

ஆறுமுக விநாயகர்

The different forms of God..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகா நதிக்கரையில் ஆறுமுக விநாயகர் திருக்கோயில் சிறப்பு வாய்ந்த தலமாகக் கருதப்படுகிறது.
சூரசம்ஹாரத்தில் சூரனை வீழ்த்திவிட்டு, உக்கிர முகம் கொண்ட முருகனின் கோபத்தைத் தணிக்க, விநாயகர் முருகனைப் போல ஆறுமுகத்துடன் காட்சி தந்து சிரிக்க வைத்தாராம். இதனால் இங்கு விநாயகர் ஆறுமுகத்துடன் காட்சி தருகிறார்.
இந்த விநாயகரை வழிபட்டால், சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

வில்லேந்திய முருகன்

The different forms of God..!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் முருகப்பெருமான் கையில் வில்லுடன் (வேட்டைக்காரன் போல) காட்சி தருவது மாறுபட்ட அமைப்பாகும். சுமார் 700 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார்இத்தலத்தில் மூலவர் சிவசுப்ரமணியசாமி, வேடர் கோலத்தில் சடா முடியுடனும், திருக்கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தி, இடுப்பில் சல்லடத்துடன், காலில் இறகு அணிந்து வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். இந்த மூவரின் திருவுருவங்களும் ஒரே கல்லில் அமைந்திருப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. கந்த சஷ்டியின்போது குழந்தைப் பேறு இல்லாதவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன், நோய் போன்ற பல பிரச்சினைகளையும் தீர்க்கும் பிரார்த்தனைக் கடவுளாக இத்தல முருகனைப் பக்தர்கள் போற்றுகிறார்கள்.

சம்மோகன கிருஷ்ணர்

The different forms of God..!!

தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம், மோகனூரில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோயிலில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூதேவியோடு நின்ற நிலையில் மூலவராக அருள்பாலிக்கின்றார்
இக்கோயிலில் சிவனும் பார்வதியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் போல, ருக்மிணியும், கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான சம்மோகன கிருஷ்ணருக்கு (கோபால சுந்தரி) இங்குத் தனிச் சந்நிதி அமைந்துள்ளது.
அபூர்வ கோலமான சம்மோகன கிருஷ்ணர் திருக்கோலத்தை வணங்கினால் தம்பதிகளிடையே ஒற்றுமை, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை மற்றும் குழந்தை பாக்கியம் கிட்டும்.

The different forms of God..!!