தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா - லைட்பாய்

ராஷ்மிகா மந்தனா

20261027202333175.jpeg

'எம்எஸ் லெகசி ஆன் ஸ்கிரீன் ' என்ற பெயரில் எம்.எஸ் சுப்புலட்சுமி பற்றிய பயோபிக் படம் உருவாகிறது. இந்தப் படத்தில் எம் எஸ் வேடத்தில் ராஷ்மிகா நடிக்கிறார். இந்தப் படத்திற்காக தற்சமயம் கர்நாடக இசை கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்." பாடுவது என்பது தனக்கு முற்றிலும் புதிய விஷயம். வெறுமனே நடிப்பதன் மூலம் அந்த கதாபாத்திரத்தை ஏமாற்றாமல் உண்மையாகவே அந்த இசை வடிவத்தை கற்றுக் கொள்ள விரும்புவதாக "சொல்கிறார் நடிகை.

ஸ்ருதிஹாசன்

20261027204548368.jpeg

" எனக்கு நடனம் ஆடுவதும், அலங்காரம் செய்து கொண்டு திரையில் கவர்ச்சியாக தோன்றுவதும் மிகவும் பிடிக்கும்" என்கிறார் ஸ்ருதி ஹாசன்.

பிரியங்கா மோகன்

20261027202718939.jpeg

அரசன் படத்தில் வடசென்னை வட்டார மொழி பேசும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரியங்கா மோகன். "நான் பெங்களூர் பெண் எனவே வடசென்னை வட்டார மொழி பேச ஆரம்பத்தில் சிரமப்பட்டேன். ஆனால் விரைவில் அந்த மொழியை பழகிக் கொண்டேன். எனது இன்னொரு முகத்தை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள் " என்கிறார் நடிகை.

சம்யுக்தா ஹெக்டே

20261027204351372.jpeg

நடிகை சம்யுக்தா ஹெக்டே நடிப்பு மட்டுமில்லாமல் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்துவார் சமீபத்தில் ஓட்ட பயிற்சி செய்யும் படங்கள் நடுரோட்டில் தலைகீழாக நிற்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ்

20261027203116216.jpeg

சமீபத்தில் ஆங்கில இதழ் ஒன்றுக்கு கீர்த்தி சுரேஷ் கொடுத்த கவர்ச்சியான போஸ் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

அனுஷ்கா

20261027203207765.jpeg

நடிகை அனுஷ்கா இனிமேல் தெலுங்கு படத்தில் நடிக்க மாட்டார். ஹைதராபாத்தில் அவர் வைத்திருந்த மாளிகையை விற்று விட்டார். அவர் குடும்பத்தினர் அவருக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள் என்றெல்லாம் தற்சமயம் வதந்தி.

சோபிதா துலிபாலா

20261027204107779.jpeg

"சூழ்நிலைக்கு ஏற்ப இயல்பாக செயல்படவும், புதிய அனுபவங்களை ஏற்றுக் கொள்ளவும் அவர்தான் எனக்கு கற்றுத் தந்தார். அவரிடம் இருக்கும் அந்த இளமையான துடிப்பும், ஆர்வம் ஆற்றலும் எனக்கு மிகவும் பிடிக்கும் ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் அது காதல் தான் "என்று தன் மனைவி சோபிதா துலி பாலா பற்றி புகழ்ந்து தள்ளுகிறார் நாக சைதன்யா.

சமீரா ரெட்டி

20261027203845266.jpeg

"தென்னிந்திய சினிமாவில் தான் அதிக மரியாதை பணம் புகழ் எல்லாம் கிடைக்கிறது" என்று வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்த சமீரா ரெட்டி சொல்கிறார். 2014-இல் பிரபல தொழிலதிபர் அக்சய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார் நடிகை சமீரா ரெட்டி.

ரெஜினா

மூக்குத்தி அம்மன் 2 படத்தைத் தொடர்ந்து இரண்டு ஹிந்தி படங்களில் நடிக்கிறார் நடிகை ரெஜினா.

அர்ச்சனா ரவிச்சந்திரன்

20261027203728278.jpeg

" நீங்கள் டாக்சிக் உறவில் இருப்பதாக தோன்றினால் உடனடியாக அந்த உறவில் இருந்து விலகுங்கள். சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பது நிம்மதியான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம். நாம் நச்சுத்தன்மை கொண்ட உறவில் இருக்கிறோம் என்பதை உணர்வதே கடினம் என்பது எனக்குத் தெரியும். எனவே ஆரம்பத்திலேயே அதற்கான எச்சரிக்கை அறிகுறிகளை கண்டறிந்து விழிப்புடன் இருங்கள் " என்று நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் டாக்ஸிக் உறவு குறித்து சொல்லி இருக்கும் கருத்துக்கள் தற்சமயம் வைரலாகிக் கொண்டு இருக்கின்றன.

அனன்யா பாண்டே

20261027203505250.jpeg

"இங்கு கருத்துக்களை துணிச்சலாக சொல்லிவிட வேண்டும். வேண்டும் என்று சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. வேண்டாம் என்று நினைக்கும் விஷயங்களுக்கு ' நோ ' என்று அழுத்தமாக சொல்லிவிடுவது நல்லது. அது பிரச்சனைகளில் இருந்து நம்மை காப்பாற்றி விடும். பிடிக்காத விஷயங்களுக்கு நடிகைகள் 'நோ' சொல்ல பழகிட வேண்டும்" என்கிறார் அனன்யா பாண்டே.