உலக சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் ஒரு ரயில் பயணம் நீலகிரி மலை ரயில் என்பது ஆச்சிரியமான ஒன்று.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எப்படியும் இந்த மலை ரயிலில் பயணித்து விட வேண்டும் என்று துடித்து விடுவதை பார்க்க முடியும் தினமும்.

பிரிட்டிஷார் வழங்கின ஒரு ஆபரணம் இந்த மலை ரயில் என்று சொன்னால் மிகையாகாது.
1891 முதல் 1908 வரை இந்த மலை ரயில் கட்டுமானத்தை மலை முகடுகளில் பிரிட்டிஷ் அரசு செய்து முடித்தது.
மேட்டுப்பாளையம் குன்னூர் ரயில் பாதை 1891 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவக்கப்பட்டு
1899 ஜூன் 15 ஆம் தேதி ரயில் பயணம் துவங்கியது.
குன்னூர் ஊட்டி ரயில் பாதை 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி பார்ன்ஹில் ரயில் நிலையம் வரை வந்தது பின்னர் டிசம்பர் 15 அன்று இந்த பயணம் ஊட்டி ரயில் நிலையம் வரை துவங்கியது.

ஆரம்பத்தில் ஊட்டி சேரிங்க்ராஸ் பகுதியில் தான் ரயில் நிலையம் அமைக்க பிளான் செய்து பின்னர் செயின்ட் மேரிஸ் ஹில்லுக்கு மாற்றப்பட்டது.
நீலகிரி மலை ரயில் ஸ்விஸ் பொறியியல் வல்லுனர்களின் அபூர்வ தயாரிப்பு என்று உலகமே பாராட்டுகிறது.
நீலகிரி மலை ரயில் என்ஜின்கள்
முதன் முதலில் இங்கிலாந்து மென்சேஸ்ட்டரில் இயங்கிய Beyer, Peacok & Company யில் இருந்து 4 என்ஜின்கள் 1897 ஆம் வருடம் மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தது அந்த என்ஜின்களுக்கு பெயர் சூட்டினார் பிரிட்டிஷ் ரயில் அதிகாரிகள் அவை Panther, Lion, Tiger மற்றும் Leopard.

இந்த ஆரம்ப பிரிட்டிஷ் என்ஜின்கள் கல்லார் முதல் குன்னூர் வரை அமைக்க பட்ட செங்குத்தான சாய்வு ரயில் தண்டவாள பாதையில் பயணிக்க மிகவும் போராடி ஏறவேண்டியிருந்தது பல முறை பயணம் ரத்து செய்யப்பட்டது.
Swiss Locomotive &Machine Works, Wintherthur, Switzerland நிறுவனத்தில் தயாரிக்க பட்ட XClass முதல் 12 என்ஜின்கள் 1914 முதல் 1925 யில் வந்து சேர்ந்தது.
இரண்டாவதாக 5 என்ஜின்கள் 1952 யில் வந்து.
கல்லார் முதல் குன்னூர் வரை 28 கி மி pinion பல் சக்கரம் இரண்டு தண்டவாளத்தின் நடுவில் பொறுத்த பட்டு சரிவில் சறுக்காமல் பாதுகாப்பாக வர பொருத்த பட்டது.
ஸ்விஸ் ரயில் கம்பனி முடிய பிறகு 2011-2014 மற்றும் 2021-2022யில் திருச்சி கோல்டன் ராக் ரயில்வே பணிமனையில் நிலக்கரி என்ஜின் நிலக்கரி மற்றும் (Oil furnace engine ) உலை எரியெண்ணை என்ஜினாக மாற்றப்பட்டது.
இந்த புதுப்பிக்கப்பட்ட என்ஜின்களின் புதிய பெயர்கள் சூட்டப்பட்டன
No X37396 நீல குறிஞ்சி.
NoX37396 பெட்டா குயின்.
No X-Class 37398 நீலகிரி குயின்
No X-Class 37399 நீலகிரி Flaycatcher.
X-Class No.37389 என்ஜின் மேட்டுப்பாளையம் மியூசியத்தில் நின்று கொண்டுருக்கிறது.
X-Class 37399(Nilgiri Flycatcher )என்ஜின் சென்னை ஐ சி எப் ரயில்வே மியூசியத்தில் உள்ளது.
X-Class 37385 என்ஜின் நியூ டெல்லியில் உள்ள தேசிய ரயில் மியூசியத்தில் உள்ளது.
X-Class 37389 என்ஜின் கோவை ரயில் நிலையத்தில் உள்ளது.
X-Class 37390 என்ஜின் குன்னூர் ரயில் நிலையத்தில் உள்ளது.
X-Class 37386 என்ஜின் ஊட்டி ரயில் நிலையத்தில் உள்ளது.

இந்த என்ஜின் ரயில் நிலையத்தின் எதிரில் செல்பி ஸ்பாட் ஆக நிறுத்தப்பட்டு இருந்தது பின் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ரயில் நிலையத்தின் முன் புறம் உள்ள பூங்காவிற்கு இடம் மாற்றப்பட்டு மறைவாக வைத்துள்ளனர்.
இந்த என்ஜினை அப்புற படுத்த இரண்டு பெரிய கிரேன்கள் பயன் படுத்த பட்டு லாரியில் ஏற்ற லாரி டயர் வெடித்த நிகழ்வும் அரங்கேறியது.
தற்போது 6 டீசல் மூலம் எரிக்கப்படும் நிலக்கரி என்ஜின்.
2 நிலக்கரியில் இயங்கும் என்ஜின்.
5 டீசல் என்ஜின்கள் மலைகளின் அரசியின் ரயில் பாதையில் தங்களின் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

X37400 முதல் இந்தியாவில் தயாரித்த நிலக்கரி நீராவி என்ஜின்
C 37401 oil fired என்ஜின் மற்றும் X 37384 பழைய நிலக்கரி என்ஜின் நன்றாக பயணிக்கும் நிலையில் இருந்தாலும் இவை குன்னூர் மேட்டுப்பாளைய ஷேடில் கிடப்பில் போடப்பட்டு கிடப்பது வருத்தமான விஷயம் என்கிறார் நீலகிரி மலை ரயில் காட் பாதர் நட்ராஜ்.

Leave a comment
Upload